தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சிதான் சரி - ராமதாஸ்
காரைக்குடி:
தமிழகத்தில் ஒரு கட்சிதான் சரியாக இருக்கும். கூட்டணி ஆட்சி தேவையில்லை என்றுபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் எஸ். ராமதாஸ் தெரிவித்தார்.
காரைக்குடியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதி கொள்கைகளுக்கும், விவசாயிகளின்பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து போராடி வருகிறது.
தமிழகத்தில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி அளிக்கப்படுவதில்லை.ஏழைகளுக்கு ஒரு மாதிரியாகவும், பணக்காரர்களுக்கு ஒரு மாதிரியாகவும் கல்விஅளிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளின் தரம் மோசமாக உள்ளது.
சமூக நீதியில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்திஎல்லா தரப்பு மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும்.
வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை அரசுத் துறையில் 4 சதவீதம் மட்டும்வேலைவாய்ப்பு உள்ளது. மீதமுள்ள 96 சதவீதம் தனியார் துறையில்தான். எல்லாதரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டும் என்பதால் தனியார்துறையிலும் இட ஒதுக்கீடு கேட்டு தமிழகத்திலும், நாடு தழுவிய அளவிலும் பாமகபோராடி வருகிறது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சரியாக வராது. அது தேவையும் இல்லை. ஒரு கட்சிஆட்சிதான் சிறந்தது. அதனால், ஆட்சியில் பங்கு கொடுத்தாலும் அதை ஏற்கக்கூடாதுஎன்பதுதான் பாமகவின் கொள்கை. அப்படிக் கொடுத்தாலும் அதை பாமகஒருபோதும் ஏற்காது என்றார் ராமதாஸ்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications