ஆர்.எஸ்.எஸ்.சின் "சுதேசி சர்ச் கருத்துக் கிளப்பிய சர்ச்சை
டெல்லி:
வெளிநாட்டுத் தொடர்புகளை முற்றிலும் அறுத்தெறிந்து விட்டு தேசியவாத சர்ச்சுகளை (சுதேசி சர்ச்) இந்தியகிறிஸ்தவர்கள் பின்பற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் கூறியிருப்பதற்கு அரசியல் கட்சித்தலைவர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
சனிக்கிழமை நாக்பூரில் அளித்த பேட்டியில், சுதர்சன் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார். மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின், மூல இயக்கமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் இவ்வாறுகூறியிருப்பது, அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சுதர்சனின் இந்த அறிவிப்பு இந்துக்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கை எனபாரதீய ஜனதா கட்சியில் உள்ள அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுதர்சனின் இந்தப் பேட்டியால், ஆளும் தேசிய முன்னணிக் கூட்டணியின் தலைவரான பாரதிய ஜனதாவுக்குத் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
சுதர்சன் கருத்து குறித்து, பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் மெளனம் சாதித்து வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சிஆளும் கட்சியாக இருப்பதால் இந்த விஷயத்தில் தெளிவான எந்த முடிவையும் எடுக்க முடியாது என பா.ஜ.க.தலைவர் ஒருவர் கூறியுள்ளார்
பாரதீய ஜனதா கட்சியைப் பொருத்தவரை கொள்கையை கடைப்பிடிப்பதில் "மிதவாதிகள், "தீவிரவாதிகள் என இருபிரிவினர் உள்ளனர். இந்த "தீவிரவாதிகள் ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து வந்தவர்கள். இவர்கள் சுதர்சனின் கருத்தைதனிப்பட்ட முறையில் ஆமோதித்துள்ளனர். மிதவாதக் கருத்துடைவர்கள் சுதர்சன் பேட்டி குறித்து ஆட்சேபம்தெரிவித்துள்ளனர்.
மிதவாத தலைவர் ஒருவர் கூறுகையில், அமெரிக்க அதிபர் கிளிண்டன், சமீபத்தில் பிரதமர் வாஜ்பாய் அமெரிக்காசென்றிருந்தபோது, இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் சென்ற வாரம் நடந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய பிரதமர் வாஜ்பாய், தனது அமெரிக்க சுற்றுபயணத்தின் போது இந்திய கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிகாரிகள் கேட்டதாககூறினார்.
அந்தக் கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சி கிறிஸ்தவர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவதில்லை எனகூறினார். இந்தச் சூழ்நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் இது போன்று கூறியிருப்பது தவறானது என்றார்.
ஒன்று பட்ட ஜனதா தளம் மற்றும் இடது சாரி கட்சிகளும் ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்துக்கு கடும கண்டனம்தெரிவித்துள்ளன.
தேசிய முன்னணி கூட்டணியில் இடம் பெற்றுள்ள தோழமைக் கட்சிகளும் இது குறித்து குறை கூறியுள்ளன. விஷ்வஇந்து பரிஷத் மட்டுமே சுதர்சனின் முடிவை ஆதரித்துள்ளது.
மூத்த காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் சிங் , இந்திய அரசியல் சட்டம் அனைவருக்கும் மத சுதந்திரம் அளித்துள்ளது.எனவே யாரும் தனது மதம் தொடர்பான கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கக் கூடாது என கூறியுள்ளார்.
ஒன்று பட்ட ஜனதா தளத்தின் தலைவர் பிரபுநாத் சிங், இது போன்ற அறிக்கைகள் சட்டத்திற்கு புறம்பானது எனகருத்து தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவர் மம்தா பானர்ஜி, ஆர்.எஸ்.எஸ். அரசுக்கு பிரச்சனைகளை உருவாக்கிவருகிறது. வரவிருக்கும் மேற்கு வங்கத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.
மேற்கு வங்கத்தில் கிறிஸ்தவ வாக்காளர்கள் கணிசமான அளவு உள்ளனர். தற்போதைய ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்து,தேர்தலில் திரிணாமுல் காங்கிரசின் வெற்றி வாய்ப்பை பாதிக்கக் கூடும். நாங்கள் மீண்டும் பாரதீய ஜனதா கட்சியுடன்கூட்டணி அமைப்பது பற்றி யோசித்து முடிவு செய்வோம் என மிரட்டலாக கூறியுள்ளார்.
விஷ்வ இந்து பரிஷத் மட்டும் சுதர்சனனின் அறிக்கையால் மகிழ்ச்சி அடைந்துள்ளது. இதன் துணைத் தலைவர்ஆச்சாரியா கிரிராஜ் கிஷோர் தெரிவிக்கையில், நாங்கள் எந்த மதத்தையும் எதிர்க்கவில்லை. அயல் நாட்டினர்இந்தியாவில் அமைதியின்மையை ஏற்படுத்துவதைத்தான் எதிர்க்கிறோம்.
இந்த அமைப்புகள் அயல் நாட்டிலிருந்து நிதி உதவி பெற்றுக் கொண்டு அப்பாவி மலைவாழ் மக்களை மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்துகின்றன.
இந்த கிறிஸ்துவ அமைப்புகள் மிசோரம் மற்றும் நாகலாந்து பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளுக்கு உதவி வருகிறது என கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications