இன்டர்நெட் வர்த்தகம்: கேரள ரப்பர் விவசாயிகளுக்குப் பயனளிக்கும்
கொச்சி:
இன்டர்நெட் வர்த்தகத்தால் கேரள மாநில ரப்பர் விவசாயிகள் அதிக அளவில் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் முதல் இன்டர்நெட் இணைப்பகம் கல்கத்தாவில் நவம்பர் 15-ம் தேதி திறக்கப்படவுள்ளது. சுமார் ரூ.40 லட்சம் செலவில் இந்த இணைப்பகம்அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இன்டர்நெட் இணைப்பகம் செயல்படத் தொடங்கிவிட்டால் இந்தியாவில் இன்டர்நெட் வர்த்தகம் விரிவடையும். இதனால், கேரள ரப்பர் விவசாயிகள்அதிகம் பயன்பெறுவார்கள் என்று இன்ட்நெட் இணைப்பகத்தின் அதிகாரி பிஜு நாயர் தெரிவித்தார்.
இப் புதிய இன்டர்நெட் இணைப்பகம் 30 சதவீதம் நாட்டின் ரப்பர் வணிகத்தின்மீதுதான் கவனம் செலுத்தும். அது தவிர, வங்கியியல், இன்சூரன்ஸ், மரவியாபாரம் ஆகியவை தொடர்பான தகவல்களையும் இந்த இணைப்பகம் வழங்கும்.
ரப்பர் மற்றும் ரப்பர் உற்பத்திப் பொருட்கள் வியாபாரத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் இந்த இன்டர்நெட் இணைப்பகத்தின மூலம் ரப்பர்விவசாயிகள் பெறமுடியும் என்றார் பிஜு நாயர்.
இந்தியாவில் கேரளத்தில்தான் அதிக ரப்பர் விளைகிறது. தற்போது அங்கு ஒரு கிலோ ரப்பர் ரூ. 26 முதல் ரூ. 30 வரை விற்கப்படுகிறது. 1996-ம்ஆண்டுதான் அதிகபட்சமாக ஒரு கிலோ ரப்பர் ரூ. 51.22-க்கு விற்கப்பட்டது.
உலகின் ரப்பர் சந்தை என்று அழைக்கப்படும் கோலாலம்பூரை விட கேரள ரப்பர் விலை கிலோவுக்கு ரூ.6 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications