பிரதமர் சந்திக்கவுள்ள மருத்துவ சோதனைகள்
மும்பை:
75 வயதாகும் பிரதமர் வாஜ்பாய்க்கு மூட்டு வலி காரணமாக செவ்வாய்க்கிழமைமும்பை மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக திங்கள்கிழமையே வாஜ்பாய் மும்பை பிரீச்கன்டி மருத்துவனையில்அனுமதிக்கப்படுகிறார். மருத்துவமனைக்கு வாஜ்பாய் வந்து சேர்ந்ததும் அவருக்கு சிலபரிசோதனைகள் நடத்தப்படும். இதற்காக அவருக்கு மருத்துவமனை உடைஅணிவிக்கப்படும்.
ஆபரஷேனுக்கு உட்படும் நோயாளிகளுக்கு முதலில் நடத்தப்படுவது போலவே,வாஜ்பாய்க்கும் இ.சி.ஜி எடுக்கப்படும். பின்னர் ரத்த பரிசோதனைமேற்கொள்ளப்படும். இதில் ரத்தத்தில் போதுமான வெள்ளை அணுக்கள் இருக்கிறதா,சர்க்கரை அளவு, எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு மற்றும் பிற நோய்க் கிருமிகள் இருக்கிறதாஎன்று ஆராயப்படும்.
ஆபரஷேனையடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே பிரதமர் வாஜ்பாய் உணவுக்கட்டுப்பாட்டைத் துவக்கி விட்டார். இது வழக்கமான ஒன்றுதான். செவ்வாய்க்கிழமைகாலை வரை இந்த சோதனைகள் தொடரும். அதன் பிறகு அறுவைச் சிகிச்சைதுவங்கும். அறுவைச் சிகிச்சைக்கான நேரம் இதுவரை குறிக்கப்படவில்லை.திங்கள்கிழமை இரவுதான் இதுகுறித்துத் தீர்மானிக்கப்படும்.
அறுவைச் சிகிச்சைக்கு முன்பு பிரதமருக்கு ஸ்பைனல் எபிடூரல் அனஸ்தீஸியா (மயக்கமருந்து) கொடுக்கப்படும். அதேபோல, அறுவைச் சிகிச்சைக்குப் பின்பு வலியைமறப்பதற்காக ஊசி போடப்படும். 48 மணி நேரத்திற்கு இந்த மருந்து வேலை செய்யும்.
அறுவைச் சிகிச்சையின்போது பிரதமரின் இடது முழங்காலில் முதலில் ஆபரேஷன்செய்யப்படும். வயோதிகம் காரணமாக தேய்ந்து போயுள்ள எலும்புகள் வெளியேஎடுக்கப்படும். அதன் பிறகு, செயற்கை எலும்புகள் உள்ளே பொருத்தப்படும். காலின்கீழ்ப் பகுதி எலும்புகள் மற்றும் தொடை எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகள்மூலம் இந்த செயற்கை மூட்டு உருவாக்கப்படுகிறது.
பிரீச்கன்டி மருத்துவமனை டாக்டர்கள் கருத்துப்படி, செயற்கை முழங்கால் மூன்றுபகுதிகளைக் கொண்டதாக இருக்கும்.குரோமியம் கோபால்ட் மூலம் உருவாக்கப்பட்டதொடை எலும்பு, அல்ட்ரா ஹை மாலிகுலார் பாலி எத்திலீன் மூலம் உருவாக்கப்பட்டகால் எலும்பு மற்றும் பெடல்லார் எலும்பு ஆகியவையே இவை.
பாலிமீத்தைல் மீத்தைல்அக்ரிலேட் அல்லது எலும்பு சிமென்ட் எனப்படும்வேதிப்பொருள் மூலம் செயற்கை மூட்டு, சரியான இடத்தில் பொருத்தப்படும். எலும்புசிமென்ட் போடப்பட்ட 10 நிமிஷங்களுக்குப் பிறகு செயற்கை மூட்டு பொருத்தும்பணி முடிவடைகிறது.
செயற்கை மூட்டு பொருத்தப்படும் அதே நேரத்தில், மூட்டுப் பகுதியின் உள்ள சிறியகுழாய் வைக்கப்படுகிறது. ரத்தத்தை உறிஞ்ச இது பொருத்தப்படுகிறது. இந்த குழாய்,விக்ரைல் வேதிப் பொருள் மூலம் மூட்டுக்கு உள்ளே வைத்து மூடப்படும். 3மாதங்களுக்குப் பிறகு இது அப்புறப்படுத்தப்படும்.
ஆபரேஷனுக்குப் பிறகு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மருத்துவமனையில்பிரதமர் ஓய்வெடுக்க வேண்டியதிருக்கும். அதற்குப் பின் ஒரு மாதம் வரைபிசியோதெரப்பி சிகிச்சை அளிக்கப்படும்.
ஆபரேஷனுக்குப் பிறகு சில நாட்களுக்கு "வாக்கர் கருவியைப் பயன்படுத்தி பிரதமர்"நடை பயில வேண்டும். மூன்று வாரங்களுக்குப் பிறகு ஊன்றுகோலைப் பயன்படுத்திநடக்கலாம். மூன்று மாதங்களுக்குப் பிறகே வழக்கம்போல நடக்க முடியும்.
மருத்துவமனையில் இருக்கும் காலத்தில் தனது அலுவலகப் பணிகளையும் பிரதமர்மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரீச்கன்டிமருத்துவமனையில் முழுமையான தகவல் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மருத்துவமனையின் ஏழாவது தளம் முழுவதும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications