சுதேசி கிறிஸ்தவம்: ஆர்.எஸ்.எஸ்சுக்கு கிறிஸ்தவ தலைவர்கள் எதிர்ப்பு
டெல்லி:
மேற்கத்திய கிறிஸ்தவ நடைமுறைகளை கைவிட்டு விட்டு இந்திய மயமாகுங்கள் எனஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் கூறியுள்ளது, அரசியல் நோக்கத்துடன் கூடியது எனபெரும்பாலான கிறிஸ்தவ தலைவர்கள் கூறியுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் கடந்த வாரம் கூறுகையில், இந்திய கிறிஸ்தவசர்ச்சுகள், மேற்கத்திய அயல்நாட்டு தாக்கத்திலிருந்து வெளிவந்து கேராளாவில் உள்ளசிரியன் மற்றும் மார்தோமா சர்ச்களைப் போல் சுதேசி முறையில் அல்லது இந்தியமுறைப்படியான சர்ச்சுகளை அமைக்குமாறு கூறியிருநதார்.
கேரளாவில் உள்ள கிறிஸ்துவ தலைவர் ஒருவர் கருத்து கூறுகையில், இது அரசியல்நோக்கத்துடன் வெளியிடப்பட்ட கருத்து. ஆர்.எஸ்.எஸ்.சும் பாரதிய ஜனதா கட்சியும்சிறுபான்மை மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும் என எண்ணுகின்றனர் அதன்அடிப்படையில் கூறப்பட்ட கருத்து இது.
மேலும், கேரளாவில் வாழும் கிறிஸ்தவர்கள் நாடு முழுவதும் வாழும்கிறிஸ்தவர்களுக்கு உதாரணமாக திகழ்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்.கேரள கிறிஸ்தவர்கள் நாட்டின் எல்லாப் பகுதிளிலும் பரவி வாழ்கிறார்கள். எனவேஅவர்கள் நன்மதிப்பைப் பெற்று, அவர்கள் ஓட்டைப் பெற வேண்டும் என்ற அரசியல்நோக்கத்துடன் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
சமீபத்தில் கோட்டயத்தின் திருவள்ளா நகராட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 6இடங்களில் வெற்றி பெற்றது. இந்த இடங்களில் மார்த்தோமா கிறிஸ்தவர்கள்அதிகமாக வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கத்தோலிக்க பிஷப் அமைப்பை (சிபிசிஐ) சேர்ந்த ஒருவர் கூறுகையில்,ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சமீபத்தில், வாடிகனில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களே மற்றகிறிஸ்தவர்களைக் காட்டிலும் கொள்கை அளவிலும் சிறந்தவர்கள் என கூறியதன்அடிப்படையில் கேரள கிறிஸ்தவர்களை கவர்ந்து ஓட்டுகள் வாங்க முயற்சிக்கிறது.கிறிஸ்தவர்களை பிரித்தால் ஓட்டுகள் வாங்குவது எளிது என நினைக்கின்றனர் எனகூறியுள்ளார்.
மாலான்காரா சர்ச்சைச் சேரந்த ஒருவர் கூறுகையில் நாங்கள் என்றுமே இந்தியகிறிஸ்தவர்கள் தான், எங்கள் இந்துச் சகோதரர்களுடன் எங்களுக்கு என்றுமேபிரச்னைகள் இருந்ததில்லை என கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications