"5 நாட்களில் நடப்பார் வாஜ்பாய்
மும்பை:
மூட்டு வலி அறுவைச் சிகிச்சைக்குப் பின் பிரதமர் வாஜ்பாய் நலமுடன் இருபபதாக மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியும், வாஜ்பாய்க்கு அறுவைச்சிகிச்சை செய்த டாக்டர் சித்தரஞ்சன் ரனவத்தும் தெரிவித்துள்ளனர்.
மூட்டுவலிக்காக மும்பை பிரீச்கன்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பிரதமர் வாஜ்பாய்க்கு செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில்அறுவைச் சிகிச்சை நடந்தது. சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த அறுவைச் சிகிச்சை குறித்து அத்வானியும், ரனவத்தும் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பிரதமர் நலமுடன் உள்ளார் என்றனர்.
ரனவத் தலைமையில் நான்கு டாக்டர்கள் கொண்ட குழு அறுவைச் சிகிச்சை செய்தது. பிற டாக்டர்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.
ரனவத் கூறுகையில், பிரதமரின் இடது கால் மூட்டு மிகவும் தேய்ந்து போய் இருந்தது. அது தற்போது முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது. மூட்டில்உள்ள இரண்டு இணைப்பு எலும்புகளும் தேய்ந்து விட்டன.
பிரதமரின் வலது கால் மூட்டில் லேசாக தேய்வு காணப்படுகிறது. இருப்பினும் அதற்கு இப்போதைக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படாது. வழக்கமாகமூட்டு அறுவைச் சிகிச்சை செய்யும்போது இரு கால்களிலும்தான் நான் செய்வது வழக்கம். ஆனால் பிரதமரின் வயது மற்றும் உடல் நலனைக் கருத்தில்கொண்டு ஒரு காலில் மட்டுமே இப்போது செய்துள்ளோம்.
பிரதமர் வாஜ்பாய் 5 நாட்களில் நடக்கத் துவங்குவார். அறுவைச் சிகிச்சையின்போது எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. பிரதமர் நன்றாக இருக்கிறார்.
அடுத்த 15 ஆண்டுகளுக்கு பிரதமர் நடப்பதில் எந்தச் சிரமமும் இருக்காது. அதே போல, இன்னும் சில வாரங்களில் தனது சுற்றுப்பயணங்களைக் கூடபிரதமர் வழக்கம் போல மேற்கொள்ளலாம் என்றார் ரனவத்.
அத்வானி கூறுகையில், பிரதமரின் உடல் நிலை குறித்து ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் விசாரித்தார். அவரிடம், பிரதமர் நலமுடன் இருப்பதாக தெரிவித்தோம்என்றார்.
அறுவைச் சிகிச்சை முடிவடைந்த நிலையில், பிரதமருக்கு சில நாட்களுக்கு பிசியோதெரப்பி சிகிச்சை வழங்கப்படும். இதன் மூலம் மூட்டுப் பகுதிக்கு ரத்தஓட்டம் சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படும்.
பிரதமர் புதன்கிழமையே எழுந்து நிற்க முடியும் என டாக்டர் ரனவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தினசரி சிறிது நேரம் பிரதமர் நடை பயில்வார். வலிஅதிகமாக இருந்தால் மட்டும் நடப்பதைத் தவிர்க்கலாம். அடுத்த இரண்டு நாட்களுக்கு திட உணவு உட்கொள்வதை பிரதமர் தவிர்க்க வேண்டும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications