சசிகலாவுக்கு அதிமுகவில் பதவி தந்தார் ஜெயலலிதா
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவை அக்கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக நியமித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா. இவர் அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது.
அதிமுக கட்சியின் சட்டப்படி பொதுக்குழு உறுப்பினராக இருப்பவரைத்தான் கட்சியின் நிர்வாக பொறுப்புக்களில் நியமிக்க முடியும். இதற்கிடையே,திங்கள்கிழமை சசிகலா அதிமுக பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக, ஜெயலலிதா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பில் திருமதி என்.சசிகலா இன்று முதல் நியமிக்கப்பட்டிருக்கிறார். கழக உடன்பிறப்புக்கள் அவருக்கு முழு ஒத்துழைப்புநல்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள பல ஊழல் வழக்குகளில் சசிகலாவும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. டான்சி நிலப் பேர ஊழல்வழக்கில் சசிகலாவுக்கும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு உறுப்பினராக சசிகலாநியமிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications