டான்சி வழக்கின் ஹீரோ சுப்பிரமணியம் சுவாமி
சென்னை:
டான்சி ஊழல் விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தான்.
டான்சி நில பேரம் குறித்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக முதன் முதலில் வழக்குத் தொடர கவர்னரின்அனுமதி கோரி சுவாமி தான் மனு கொடுத்தார். அதற்கு முன்பாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குத்தொடர்ந்தார்.
ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் அவர் மீது வழக்குத் தொடர கவர்னரின் அனுமதி தேவை என்று கூறி அந்த வழக்கைசெஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து அப்போதைய கவர்னர் பீஷ்மநாராயண்சிங்கிடம் அனுமதி கேட்டார். ஆனால், ஜெயலலிதாவின் ஜால்ராவாகவிளங்கிய பீஷ்மநாராயண் சிங் அதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார்.
அதை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடர்ந்தார் சாமி. இவ்வழக்கு விசாரணையில் இருக்கும்போதுபீஷ்மநாராயண் சிங் மாற்றப்பட்டு, மறைந்த சென்னாரெட்டி கவர்னாக பொறுப்பேற்றார்.
சுவாமியின் நெருங்கிய நண்பராக இருந்த சென்னா ரெட்டி, ஜெயலலிதா மீது வழக்குத் தொடர சுவாமிக்கு அனுமதி வழங்கினார்.
நல்ல பெயர் முழுக்க முழுக்க சுவாமிக்கு செல்வதைத் தடுக்கவும் இப்பிரச்னையில் முந்திக் கொள்ளவும் திமுக தயாரானது. அக்கட்சியில் சட்டப் பிரிவுச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெயரில் வக்கீல் சண்முகசுந்தரம் என்பவர் டான்சி நிலம் விற்பனைதொடர்பாக சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்குத் தொடர கவர்னரின் அனுமதி தேவையில்லை என்று திமுக தரப்பில்வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற மாஜிஸ்திரேட் ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்பினார்.
இந் நிலையில் ஒரு இரவு நேரத்தில் வக்கீல் சண்முகசுந்தரம் கடுமையாக தாக்கப்பட்டார். அவரது விரல்கள் துண்டாகிப் போயின.மருத்துவமனையில் குற்றுயிரும் குலை உ.யிருமாக சேர்க்கப்பட்டார். அவரை இரவோடு இரவாக கருணாநிதியும், ஆற்காடுவீராசாமியும் மருத்துவமனையில் வந்து பார்த்தனர். இந்த தாக்குதல் கும்பலை ஜெயலலிதா தான் அனுப்பியதாக கருணாநிதிகுற்றம் சாட்டினார்.
இதையடுத்து மாநிலம் முழுவதும வக்கீல்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். நீதிமன்றங்க் ஸ்தம்பித்தன.
அப்போது நிலவிய பெரும் குழப்பத்திற்கு மத்தியில் கவர்னரின் அனுமதியுடன் முறைப்படி செஷன்ஸ் நீதிமன்றத்தில்ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்ரமணியம் சுவாமி வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து டான்சி நில விற்பனை தொடர்பாகவிசாரிக்குமாறு போலீசாருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை நடந்து கொண்டேடட..... இருந்தது. ஜெயலலிதாஆட்சி போனது. கருணாநிதி முதல்வரானார். விசாரணை மிகத் துரிதமானது.
இறுதியில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 6 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனி நீதமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.இப்போது ஜெயலிதாவை ஜெயில் தள்ள உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
இந்த வழக்கில் உண்மையான ஹீரோவான சுப்பிரமணியம் சுவாமி, பின்னர் ஜெயலலிதா கூட்டணியிலேயே சேர்ந்து மதுரைஎம்.பியானதும், அதன் பின்னர் மீண்டும் ஜெயலலிதாவின் எதிரியானதும் அரசியல் அசம்பாவிதங்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications