குழப்பம் ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீரப்பன் விவகாரத்தில் ஏகப்பட்ட குழப்பம் நிலவுகிறது.

வீரப்பனைச் சந்திக்க நெடுமாறன் சில நிருபர்களுடன் முன்பே காட்டுக்குச் சென்றதாகதகவல்கள் வந்தன. இதை நெடுமாறனோ, அரசோ உறுதி செய்யவில்லை.

ஆனால், இவர் காட்டுக்குள் செல்ல முயன்றது உண்மை தான் என இப்போதுஉறுதியாகியுள்ளது.

நெடுமாறனை காட்டுக்குள் செல்ல விடாமல் அரசு தடுத்ததால் அவர் தனது பயணத்தைகாட்டுக்கு அருகில் சென்ற நிலையில் நிறுத்திக் கொண்டதாக இப்போதுதெரியவந்துள்ளது.

அதே போல அரசுத் தூதராக ஐந்தாவது முறையாக நக்கீரன் கோபால் காட்டிற்குச்செல்வதாக அறிவித்தது தமிழக அரசு. கோபாலும் அரசு அறிவித்தபடிஞாயிற்றுக்கிழமை கிளம்பிச்சென்றார்.

வழக்கமாக கோபால் சென்னையில் இருந்து புறப்பட்ட உடனேயே அவர்சத்தியமங்கலம் போய்விட்டார், அவரை அழைத்துச் செல்ல வீரப்பனின் ஆள்வந்துவிட்டான், மழை பெய்கிறது, நடுக்காட்டில் காத்திருக்கிறார் என லைவ் ரிப்போர்ட்தரும் தமிழக அரசு கடந்த முறை மட்டும் அமைதியாக இருந்தது. இதற்கான காரணம்இப்போது தான் தெரியவந்துள்ளது.

நெடுமாறனை அழைத்து வராததால் கோபாலை வீரப்பன் சந்திக்க மறுத்து திருப்பிஅனுப்பிவிட்டான். இதை வெளியே சொல்லாமல் கோபாலும் அரசுகளும்மறைத்துவிட்டன.

இதையடுத்துத் தான் இப்போது நெடுமாறனை காட்டுக்குள் அனுப்பி வைத்திருக்கிறதுதமிழக அரசு.

கோபாலிடம் கடந்த முறையே வீரப்பன் கூறுகையில், அடுத்தமுறை வரும் பொழுதுநெடுமாறன், புதுவை மக்கள் சிவில் உரிமைக் கழக அமைப்பாளர் சுகுமாறன்,பேராசிரியர் கல்யாணி ஆகியோரையும் அழைத்து வரவேண்டும் என்று வீரப்பன்தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாம்.

ஆனால், நெடுமாறனும், மற்றவர்களும் காட்டிற்குச் செல்வதை தமிழக அரசுவிரும்பவில்லை. ஏற்கனவே அரசுதரப்பில் ஒருவர் சென்று கொண்டிருக்கிறார். புதிதாகவேறு தூதர்கள் சென்றால் ஏதாவது குழப்பம் ஆகிவிடப்போகிறது என்று நிறையயோசித்தது தமிழக அரசு.

இறுதியில், கோபாலை மட்டும் காட்டிற்கு தூதுவராக ஐந்தாவது முறையாகஅனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்டிற்குக்கிளம்பிச் செல்வதாக அறிவிக்கப்பட்டது. கோபாலும் காட்டிற்குச் செல்வதாகவேஅறிவித்தார். கிளம்பியும் சென்றார்.

ஆனால், பாதிவழியிலேயே, புதிய தூதர்களை அழைத்துவாருங்கள் அப்பொழுதுதான்பேச முடியும் என்று வீரப்பன் தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாம். கோபாலும்உடனே சென்னைக்கு திரும்பி விட்டாராம்.

மறுபடியும் தமிழக முதல்வரிடம் நிலைமையை எடுத்துச் சொன்னார். உடனேநெடுமாறனிடம் பேசினார்கள் அதிகாரிகள். ஆனால், இம் முறை காட்டுக்குச் செல்லநெடுமாறன் ஒப்புக் கொள்ளவில்லை. இறுதியில் முதல்வர் கருணாநிதி,சமாதானப்படுத்திய பின்பே நெடுமாறன் காட்டுக்குச் சொல்ல சம்மதம் தெரிவித்ததாககூறப்படுகிறது.

இதன் அடிப்படையில்தான் நக்கீரன் கோபாலுடன், நெடுமாறன் காட்டிற்குக் கிளம்பிச்சென்றார் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+