இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து
நைரோபி:
நைரோபியில் புதன்கிழமை நடந்த ஐ.சி.சி. நாக் அவுட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி அபாரமாக ஆடி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
பாகிஸ்தான் அணிக்கும், நியூசிலாந்து அணிக்கும் இடையே நடந்த இந்தப் போட்டி ஆரம்பம் முதலே பரபரப்பாக இருந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில்பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
அன்வரும், இம்ரான் நசீரும் பேட்டிங்கைத் துவக்கினர். நசீர் சீக்கிரம் போய் விட அன்வர் அபாரமாக ஆடினார். 104 ரன்கள் எடுத்த அவர் அணிக்குநல்ல ஊக்கத்தைக் கொடுத்தார்.
அவருக்குப் பிறகு வந்தவர்களில் யுஹானா (24), ரஸ்ஸாக் (48), வாசிம் அக்ரம் (34) ஆகியோர் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி விளையாடினர்.
இறுதியில் 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்களை பாகிஸ்தான் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் கானர் 5 விக்கெட்டுகளைவீழ்த்தினார். ஸ்டைரிஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
நியூசிலாந்து அணி தனது இன்னிங்ஸை சரிவுடன் துவக்கியது. ஸ்பியர்மன் 1 ரன்னில் மஹமத் பந்தில் வீழ்ந்தார். பிளமிங் 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.அதற்குப் பிறகுதான் விநோதம் நிகழ்ந்தது.
ஆஸ்டில், டுவோஸ் சேர்ந்து பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை சிதறடிக்கத் துவங்கினர். இவர்களைப் பிரிக்க பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் முடியவில்லை.ஓவருக்குக் கிட்டத்தட்ட 5 ரன்கள் எடுத்த இருவரும் அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தி வந்தனர்.
டுவோஸ் தன்னிடம் வந்த பந்துகளை எல்லாம் விரட்டியடித்தார். இறுதியில், 87 ரன்கள் எடுத்த நிலையில், சக்லைன் முஷ்டாக் பந்தில் வீழ்ந்தார். டுவோஸ்வெளியேறினாலும் கூட நியூசிலாந்து வீரர்கள் பயம் இல்லாமல் துணிச்சலுடன் ஆடினர்.
மெக்மில்லனும், ஸ்டைரிஸும் இணைந்து ஸ்கோரை உயர்த்தினர். மெக்மில்லன் 51 ரன்கள் எடுத்தார். ஸ்டைரிஸ் 28 ரன்கள் சேர்த்தார். இருவரும் கடைசி வரையில்ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில், 49 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் ஐ.சி.சி. நாக் அவுட் போட்டியின் இறுதி ஆட்டத்திற்குத் தகுதிபெற்றது.
ஆட்ட நாயகனாக கானர்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்தியா, தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள 2-வது அரை இறுதிப் போட்டியில்வெற்றி பெறும் அணியுடன், நியூசிலாந்து இறுதிப் போட்டியில் மோதும்.
ஸ்கோர்:
பாகிஸ்தான் - 252.
நியூசிலாந்து - 255-6.
ஆட்ட நாயகன் - கானர்ஸ் (நியூசிலாந்து).
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications