மொராக்கோவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தப் போகிறார் அமர்நாத்
துபாய்:
மொராக்கோ நாட்டில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நடவடிக்கையாகமொராக்கோவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த ஷார்ஜாவைச் சேர்ந்த கிரிக்கெட்வீரர்கள் நல நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது.
ஷார்ஜாவில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளை இந்த அமைப்புதான் நடத்திவருகிறது. மொராக்கோவில் நடக்கவுள்ள கிரிக்கெட் போட்டிகளுக்கானநடவடிக்கைகளை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மொஹீந்தர் அமர்நாத்கவனிக்கவுள்ளார்.
ஷார்ஜாவைப் போலவே, மொராக்கோவையும் கிரிக்கெட் தளமாக மாற்ற இந்தஅமைப்பு முடிவு செய்துள்ளது. கடந்த ஒரு வருடமாக இந்த அமைப்பில் மொஹீந்தர்அமர்நாத்தும், அவரது சகோதரர் சுரீந்தர் அமர்நாத்தும் இணைந்து செயல்பட்டுவருகின்றனர். மொஹீந்தர் ஒருங்கிணைப்பாளராக சேர்ந்துள்ளதாக அமைப்பின்துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் புகாதிர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
புகாதிர் கூறுகையில், தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆசிப் இக்பாலுடன் சேர்ந்துமொஹீந்தர் அமர்நாத் செயல்படுவார். ஷார்ஜா மற்றும் மொராக்கோவில் கிரிக்கெட்போட்டிகளை நடத்துவது குறித்து இவர்கள் முடிவு செய்வர் என்றார்.
மொராக்கோ கிரிக்கெட் குறித்து அமர்நாத் கூறுகையில், முன்பு மொராக்கோசென்றிருந்தபோது, அங்கு கிரிக்கெட் குறித்து யாருக்கும் தெரியவில்லை. ஆனால்இப்போது ஓரளவு நிலைமை மாறுபட்டுள்ளது. சிறு, சிறு அணிகள் அங்கு வந்துவிட்டன. லீக் கிரிக்கெட் போட்டிகளும் கூட நடத்தப்படுகின்றன.
காசாபிளான்கா, ரபாத், டேங்கியர்ஸ் ஆகிய நகரங்களில் கிரிக்கெட் போட்டிகளைநடத்த முடிவு செய்துள்ளோம். மொராக்கோவிற்கு துணை உறுப்பினர் பதவியியைவாங்கித் தருவது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் பேசுவோம் என்றார்.
புகாதிர் தொடர்ந்து கூறுகையில், ஐக்கிய அரபு நாடுகளில் கிரிக்கெட்டைபிரபலப்படுத்துவது எளிதான ஒன்று. ஆனால் மொராக்கோவில் அது சாத்தியமில்லை.காரணம், கிரிக்கெட் குறித்த பால பாடத்திலிருந்து அங்கு துவங்க வேண்டியுள்ளதுஎன்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications