லஞ்ச வழக்கு: நரசிம்மராவுக்கு இன்று தண்டனை அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் குற்றம்நிரூபிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு புதன்கிழமை சிறப்பு சி.பி.ஐ.நீதிமன்றம் தண்டனையை அறிவிக்கவுள்ளது.

1993-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நரசிம்மராவ் மீது கொண்டு வரப்பட்டநம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது, ராவ் அரசுக்கு ஆதரவாக ஜார்கண்ட் முக்திமோர்ச்சா எம்.பிக்கள் வாக்களித்தனர்.

இவ்வாறு வாக்களிப்பதற்கு ஜார்கண்ட் எம்.பிக்களுக்கு ராவ் லஞ்சம் கொடுத்தார் எனசி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ராவ் தவிர முன்னாள்மத்தியஅமைச்சர் பூட்டாசிங் மற்றும் பலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் ராவ், பூட்டாசிங் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சி.பி.ஐ.நீதிமன்றம் அறிவித்தது. மற்ற 7 பேரும் விடுவிக்கப்பட்டனர். ராவ், பூட்டாசிங் மீதானதண்டனை 11-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி பரிஹோக் அறிவித்திருந்தார்.

அதன்படி நீதிபதி அஜீத் பரிஹோக் தண்டனை என்ன என்பதை இன்னும் சில மணிநேரத்தில் அறிவிப்பார்.

தண்டனைக் காலம் 3 ஆண்டுகளாக இருந்தால் உடனடியாக ஜாமீன் கோரிநீதிமன்றத்தில் மனு செய்யப்படும் என்று ராவ் வக்கீல் ஏற்கனவே கூறியுள்ளார்.கூடுதலாக இருந்தால் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படும் என்றும் அவர்கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+