அரசியல் சுவடுகளிலிருந்து கவியுலகிற்கு ...
டெல்லி:
இந்தியாவின் புகழ் பெற்ற அரசியல் குடும்ப வாரிசுகளில் ஒருவரான பெரோஸ் வருண்காந்தி எழுதிய கவிதைப் புத்தகம் செவ்வாய்க்கிழமை டெல்லியில் வெளியிடப்பட்டது.
சஞ்சய் காந்தி, மேனகா காந்தியின் மகனான வருண் காந்தி ஒன்னெஸ் ஆப் செல்ஃப்என்ற கவிதைப் புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் 48 கவிதைகள் உள்ளன. மனிதஉணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கவிதைகள் எழுதப்பட்டுள்ளதாகவருண் காந்தி கூறியுள்ளார்.
புத்தக வெளியீட்டு விழாவில், மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி,அருண் ஷோரி, ராஜ்நாத் சிங், விஜய் கோயல், மதன்லால் குரானா, ஷாகிப் சிங் வர்மா,முன்னாள் காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி, காங்கிரஸ் தலைவர்கள் தவான்,ஜிதேந்திரா பிரசாத் மற்றும் அஜித் சிங் போன்றோர் கலந்து கொண்டனர்.
வருண் காந்திக்கு தற்போது 20 வயதாகிறது. இவரது தாயார் மேனகா காந்தி மத்தியசமூக நீதித்துறை அமைச்சராக இருக்கிறார். வருணின் தந்தை சஞ்சய் காந்தி. முன்னாள்இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் இரண்டாவது மகன். அவர் 1980-ம் ஆண்டுநடந்த விமான விபத்தில் அகால மரணமடைந்தார். வருண் லண்டன் ஸ்கூல் ஆப்எகனாமிக்சில் படித்தவர்.
நிகழ்ச்சியில் வருண் பேசுகையில், கவிதை எழுதும் ஆர்வம் தானாகவே வந்தது. எனதுகவிதைகள் மகிழ்ச்சி, துக்கம், வெற்றி மற்றும் தோல்வி போன்ற மனித உணர்வுகளைஅடிப்படையாகக் கொண்டு அமைந்தவை என்றார்.
எனது படைப்பை என் அம்மா படிக்கவில்லை. ஏதாவது ஒரு கவிதையைபடித்திருக்கக்கூடும். எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் ஹரிவன்ஷ் ராய் பச்சன், துஷ்யந்த்குமார், மகாதேவி வர்மா மற்றும் பப்லோ நெருடா போன்றோர் என்றும் வருண்தெரிவித்தார்.
அவரது ஒன்றுவிட்ட சகோதரியும், ராஜீவ்-சோனியா தம்பதியினரின் மகளுமானபிரியங்கா காந்தி நிகழ்ச்சிக்கு வருவாரா என கேட்ட போது நான் குடும்ப விஷயங்கள்பற்றி பேச விரும்பவில்லை என பதிலளித்தார்.
அருண் ஜெட்லி பேசுகையில், வருணிடம் நிறைய திறமை உள்ளது. அவை எப்படிவளர்கிறது என பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். அடுத்த திட்டம் என்ன என்றுவருணிடம் கேட்ட போது, பார்க்கலாம் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications