16ம் தேதி மாநிலம் முழுவதும் அதிமுக போராட்டம்
சென்னை:
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து அதிமுக அறிவித்த போராட்டம் 16ம் தேதி நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
பெட்ரோல், டீசல், சமையல் வாயு விலை உயர்வை எதிர்த்து 13ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுகதிட்டமிட்டிருந்தது. ஆனால், டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் அந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போராட்டத்தை 16ம் தேதி நடத்தும்படி கட்சியினருக்கு ஜெயலலிதா கட்டளையிட்டுள்ளார். இதுகுறித்துஅவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஏற்கனவே 13ம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் 16ம் தேதி நடைபெறும்ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்பார்கள்.
அறிவிக்கப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் சிறையில் இருக்கும் நிலையில் அந்தந்த மாவட்டச் செயலாளர்களும்,கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள கட்சியினரை விடுதலை செய்ய அந்தந்த மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள்உடனடியாக தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக அமைதி வழி அறப் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் அனைவரையும் உடனடியாகவிடுதலை செய்யும்படி மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
