சிறுத்தை கடித்து பெண் சாவு: நீதி விசாரணைக்குக் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறுத்தை கடித்து இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ 15 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரிஉயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வசித்து வந்தவர் வள்ளியம்மா. இவர் சிறுத்தைக் கூண்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது சிறுத்தை கடித்துக் குதறியது.மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு அரசின் சார்பில் 1 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

இதற்கிடையே சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பொதுநலன் கருதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

மனுவில், கடந்த 21 ம் தேதி வள்ளியம்மா வண்டலூர் பூங்காவில் சிறுத்தை கடித்து இறந்தார். இதுவரை சிறுத்தை கடித்து மூன்று பேர் இறந்துள்ளனர்.இதுகுறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும்.

சிறுத்தை கடித்து இறந்த வள்ளியம்மாவுக்கு 15 லட்ச ரூபாயும், காயம் அடைந்த பெண்ணுக்கு 10 லட்ச ரூபாயும் நஷ்டஈடு வழங்க வேண்டும். இச்சம்பவம்நடந்த போது ஆஜாக்கிரதையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+