ஈரோடு ஜமக்காளத்திற்கு காப்புரிமை கிடைக்குமா?
ஈரோடு:
ஈரோடு பகுதியில் கைத்தறி மூலம் நெசவு செய்யப்படும் "ஜமக்காளத்திற்கு காப்புரிமைபெற 5 பேர் கொண்ட குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கைத்தறிகள் அதிகமாக உள்ளன. இந்த நெசவுத் தொழில் மூலம்ஜமக்காளம் தயாரிக்கப்படுகிறது.இந்த ஜமக்காளத்திற்கு காப்புரிமை பெற மாநில அரசு5 பேர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.
பவானி நகராட்சி சேர்மன் முனியப்பன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தகமிட்டியில், கைத்தறி துறை உதவி இயக்குநர் சிவானந்த பெருமாள், பவானி டெக்ஸ்சேர்மன் செல்வராஜ் ஆகியோர் உட்பட 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஜமக்காள நெசவு பரம்பரையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நெசவு சிலஇடங்களில் தற்போது விசைத்தறிகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. விசைத்தறியில்நெசவு செய்ய அரசு அனுமதிக்கவில்லை. ஆனால், சென்னிமலை, பவானி, புத்தூர்,செத்தனம்பாளையம் ஆகிய இடங்களில் விசைத்தறி மூலம் நெசவு செய்யப்பட்டுவிற்பனை செய்யப்படுகிறது.
விசைத்தறி மூலம் நெசவு செய்வதால் ஒரு சதுர அடி ஜமக்காளத்திற்கு ரூ. 6 உற்பத்திசெலவு ஆகிறது. விசைத்தறி மூலம் 60 சதுர அடி கொண்ட 10 ஜமக்காளத்தை நெசவுசெய்யலாம். ஆனால், கைத்தறி மூலம் ஒரு ஜமக்காளத்தை நெசவு செய்ய 2நாட்களாகும். உற்பத்தி செலவு சதுர அடிக்கு ரூ.7 ஆக உள்ளது.
எனவே, விசைத்தறியால், கைத்தறிகள் நசிவடைந்து வருகின்றன. மேலும்,விசைத்தறியாளர்கள், கைத்தறியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளையும்மறைமுகமாகப் பெற்று வருகின்றனர்.
இத்தகைய சட்டத்திற்குப் புறம்பான செயலுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைஉண்டு. இருந்தபோதிலும், இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால்சட்டத்திற்கு புறம்பான நெசவு தொடர்கிறது.
இதனை அரசு தடுத்து நிறுத்தி கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனஜமக்காள காப்புரிமை கமிட்டி அரசுக்கு பரிந்துரையும் செய்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications