கருணாநிதி நன்றாக ஒத்துழைக்கிறார் .. கிருஷ்ணா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
ராஜ்குமார் மீட்பு விவகாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி நன்றாக ஒத்துழைக்கிறார்என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
கர்நாடக முதல்வர் வியாழக்கிழமை பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் பேட்டியில் கூறியதாவது:
இந்த முறை வீரப்பனை சந்திக்க கோபால், நெடுமாறன் உட்பட சென்றுள்ள நான்கு பேர்கொண்ட தூதுக்குழு நிச்சயம் ராஜ்குமாரை மீட்டு வரும்.
ராஜ்குமாரை மீட்கும் விவகாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி எனக்கு பூரணஒத்துழைப்பு தந்து வருகிறார்.
ராஜ்குமார் கடத்தப்பட்டு பல நாட்கள் ஆன நிலையிலும் எந்த விதமானஅசம்பாவிதமும் நடக்காத முறையில் இந்த அரசு திறமையாக செயல்பட்டு வருகிறது.
ராஜ்தகுமார் விடுவிக்கப்பட்ட பின்பும் எங்கள் ஆட்சிக்கு எந்த விதமான ஆபத்தும்ஏற்படாது என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications