கிளம்புவதில் இன்னும் குழம்பும் இந்தியன் ஏர்லைன்ஸ்
சென்னை:
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.சென்னையிலிருந்து மும்பைக்குக் கிளம்ப இருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்இயந்திரக் கோளாறு காரணமாக 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் கோளாறு ஏற்படுவதும், வானிலிருந்துபாதியிலேயே விமானங்களை தரையிறுக்குவதும் சமீப காலங்களில் தொடர்ந்துவருகிறது. அதிலும் சென்னைக்கு, இந்த பாதியில் இறங்கும் விமானங்களுக்கும்ஏகப்பட்ட பொருத்தம்.
இப்போது இன்னொரு விமானக் குழப்பம் பயணிகளை வெறுப்படைய வைத்துள்ளது.சென்னையிலிருந்து தினசரி காலை 7 மணிக்கு மும்பைக்கு இந்தியன் ஏர்லைன்ஸ்விமானம் இயக்கப்படுகிறது. விமானத்திற்கான பயணிகள் அனைவரும் சரியானநேரத்தில் விமான நிலையம் வந்து விட்டனர். ஆனால் விமானம் கிளம்புவதற்கானஅறிகுறி தெரியவில்லை.
விமானத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், சரி செய்யப்பட்டவுடன்விமானம் கிளம்பும் என தெரிவிக்கப்பட்டது. பயணிகளும் காத்திருந்தனர்,காத்திருந்தனர் சுமார் 4 மணி நேரம் காத்திருந்தனர். வெறுப்பின் உச்சத்தில் இருந்தபயணிகளை ஏற்றிக் கொண்டு விமானம் காலை 11 மணியளில் மும்பை புறப்பட்டுச்சென்றது.
இந்த விமானம் புதன்கிழமை இரவு மும்பையிலிருந்து, சென்னை விமான நிலையம்வந்தவுடன் விமானத்தில் சோதனை செய்யப்பட்டது. அப்போது சில உதிரிப்பாகங்களை மாற்ற வேண்டியது தெரிய வந்தது. இதையடுத்து வியாழக்கிழமை காலைஉதிரிப் பாகங்கள் மும்பையிலிருந்து வரவழைக்கப்பட்டு விமானம் கிளம்பிச் சென்றுஎன்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications