அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டக் கோருகிறது காங்.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் ராஜ்குமார் கடத்தல் பிரச்னை குறித்து விவாதிக்க தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர்கருணாநிதி கூட்ட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து இளங்கோவன் வெளியிட்ட அறிக்கை:

ராஜ்குமாரை விடுவிக்க சந்தன வீரப்பனின் சில நிபந்தனைகளை தமிழக, கர்நாடக அரசுகள் நிறைவேற்றியதைத்தொடர்ந்து 5-வது முறையாக நக்கீரன் கோபாலுடன் புதிய தூதர்களாக நெடுமாறன், கல்யாணி, சுகுமாரன்ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்னை தொடர்பாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதித்துள்ளார்.அதேபோல் தமிழக முதல்வரும் விவாதிக்க வேண்டும். இது ராஜ்குமார் சம்பந்தப்பட்ட பிரச்னை மட்டுமல்ல,இருமாநில மக்களின் வாழ்க்கைப் பாதுகாப்பு பிரச்னையும் அடங்கியுள்ளது.

இந்த பிரச்னையின் அடிப்படையை ஆழமாக உணர்ந்து பார்க்க கருணாநிதி தவறி விட்டாரோ என்ற சந்தேகம்எழுந்துள்ளது. எனவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி அதில் இதுவரை ராஜ்குமார் மீட்பு தொடர்பாகஎடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதில் உள்ள பின்னடைவு, தீர்வுக்கான சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை தமிழகஅரசு விளக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+