பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ராஜமுந்திரி (ஆந்திரப் பிரதேசம்):
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்டதீவிபத்தில் 6 பேர் இறந்தனர்.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மெடாபாசு என்ற கிராமத்தில் உள்ள பட்டாசுதொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் ஒரு பெண் உட்பட ஆறு பேர்கொல்லப்பட்டனர்.
பட்டாசுத் தொழிற்சாலையின் உரிமையாளர் (60 வயது பெண்மணி) மின்சாரம்தடைபட்டதால் வெளிச்சத்திற்காக கேஸ் சிலிண்டரைப் பற்ற வைத்தார். இதையடுத்துகட்டடம் முழுவதும் தீப் பிடித்துக் கொண்டது. இதில் பட்டாசுத் தொழிற்சாலையில்வேலை பார்த்துக் கொண்டிருந்த 5 பேரும், பெண்ணும் இறந்தனர்.
பட்டாசுத் தொழிற்சாலைக்கு பட்டாசு தயாரிக்க உரிமம் வழங்கப்பட்டிருக்கிறதா எனபோலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications