த.மா.கா கையெழுத்து இயக்கத்தில் திமுக பங்கேற்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து த.மா.கா நடத்திய கையெழுத்துவேட்டையில் திமுகவினரும் கையெழுத்துப் போட்டுள்ளனர் என்று தமாகாதெரிவித்துள்ளது.

திமுக அங்கம் வகிக்கும் மத்திய அரசு எடுத்துள்ள முடிவுப்படி பெட்ரோல், டீசல்,சமையல் வாயு விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வைகண்டித்து எதிர்க்கட்சிகள் வித விதமான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

த.மா.கா. தனது தரப்பில் கையெழுத்து இயக்கம் நடத்துவதாக அறிவித்தது. அதன்படிசென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையில் அக்கட்சியினர் பொதுமக்களைசந்தித்துக் கையெழுத்து வேட்டையாடினர்.

த.மா.கா.வின் இந்த இயக்கத்திற்கு ஆதரவாக திமுகவினரும் கையெழுத்துப்போட்டுள்ளனர் என்று இக்கட்சி பெருமிதத்தோடு தெரிவித்துள்ளது. இதிலிருந்துமத்திய அரசின் இந்த முடிவை ஆளும் திமுகவை சேர்ந்தவர்கள் கூட எதிர்க்கின்றனர்.இதை உணர்ந்தாவது மத்திய அரசும், திமுக அரசும் இந்த விலை உயர்வு முடிவைகைவிட வேண்டும் என்று தமாகா வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, பெறப்பட்ட கையெழுத்துக்களை கோரிக்கை மனுவாக்கி தமிழககவர்னர் பாத்திமா பீவியை சந்தித்து கொடுக்க தமாகா தலைவர் மூப்பனார்திட்டமிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+