40 பேருடன் காட்டுக்குள் செல்ல சமூக சேவகர் திட்டம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
ராஜ்குமாரை விடுவிக்கக் கோரி40 பேருடன் கட்டுக்குள் அமைதிப் பேரணி நடத்த சந்தன் சர்மா என்ற சமூக சேவகர்ஒருவர் திட்டமிட்டுள்ளார்.
மும்பை மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார் சர்மா. இவர் வெள்ளிக்கிழமை பெங்களூரில் செய்தியாளர்களிடம்கூறுகையில், தடா கைதிகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் வேணுகோபால், வீரப்பனால்சுடப்பட்டு உயிரிழந்த டி.எஸ்.பியின் தந்தை அப்துல் கரீம் ஆகியோரை சந்தித்த பிறகு காட்டுக்குள் செல்வேன்.கர்நாடக முதல்வரையும் சந்திப்பேன் என்றார்.
முன்னதாக அவர் 40 பேர் கொண்ட குழுவினருடன் மும்பையில் இருந்து நடை பயணமாக அவர் பெங்களூர்வந்தார். காந்தி ஜெயந்தியையொட்டி கடந்த 2ம் தேதி முதல் அவர் இந்த அகிம்சை யாத்திரயை நடத்தி வருகிறார்.
தீவிரவாத்துக்கு எதிராக மக்களைத் திரட்டுவதே தனது நோக்கம் என்கிறார் சர்மா.












Click it and Unblock the Notifications