நைரோபி கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் இந்தியா

Subscribe to Oneindia Tamil

நைரோபி:

நைரோபியில் நடந்த ஐ.சி.சி. நாக் அவுட் கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியாஇறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில், இந்திய அணி ரசிகர்களுக்கு மாபெரும்விருந்து படைத்தது. காலையில் பேட்டிங்கிலும் சரி, பிற்பகலுக்கு மேல் பெளலிங்,பீல்டிங்கிலும் சரி இந்திய வீரர்கள் கலக்கி விட்டனர்.

கேப்டன் செளரவ் கங்குலி மீண்டும் ஒரு முறை டாஸ் வென்றார். முதலில்பேட்டிங்கைத் தேர்வு செய்தது இந்தியா. கங்குலியும், டெண்டுல்கரும் மீண்டும் ஒருஅபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக டெண்டுல்கர், புயல் போல ஆடிரன்களை குவித்தார்.

கிடைத்த பந்துகளையெல்லாம் பவுண்டரிகளுக்கு விரட்டினர் இருவரும். 9.2ஓவர்களில் 50 ரன்களை சேர்த்தது இந்த ஜோடி. வங்கப் புலி கங்குலி மறுபக்கம்ஆவேசம் கொண்டு ஆடினார். 12 பவுண்டரிகள், ஆறு சிக்சர்களுடன் 141 ரன்களைக்குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெண்டுல்கரும், கங்குலியும் சேர்ந்து தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களைப் பதம்பார்த்து விட்டனர். ஆலன் டொனால்ட், ஷான் பொலக்கைத் தவிர வேறு எந்தபந்துவீச்சாளரும், இந்திய வீரர்களுக்குப் பயம் தரவில்லை.

டெண்டுல்கர் 39 ரன்களில் வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 66ரன்கள். அதன் பின்னர் ராகுல் டிராவிட், கங்குலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும்சேர்ந்து பெரிய ஸ்கோருக்கு வழி வகுத்தனர். டிராவிட் 71 பந்துகளைச் சந்தித்து 58ரன்களைச் சேர்த்தார்.

பிறகு வந்தார் புதுப் புயல் யுவராஜ் சிங். 35 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 41ரன்களை விளாசினார். இதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.

இவர்கள் சென்ற பின் வந்த ராபின் சிங் வந்த வேகத்தில் ரன் அவுட் ஆனார்.அவருக்குப் பின் வந்த வினோத் காம்ப்ளியும் வந்த மூச்சில் வெளியறினார்.இருப்பினும் அணிக்கு இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 295ரன்களைக் குவித்தது.டொனால்ட், கல்லிஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.குளூஸ்னருக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.

பின்னர் ஆடத் துவங்கியது தென் ஆப்பிரிக்கா. கிர்ஸ்டனும், ஹாலும் நம்பிக்கையுடன்ஆட்டத்தைத் துவக்கினர். ஆனால் ஹால், ஜாஹீர் கானின் அருமையான யார்க்கருக்குப்பலியானார். மறுமுனையில் கிர்ஸ்டன் இருந்தார். ஆனால் அவரை கங்குலிஅருமையான முறையில் ரன் அவுட் செய்தார்.

பயமுறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட கல்லிஸ் 15 ரன்களில் பெவிலியன்திரும்பினார். பிரசாத் பந்தில், கங்குலி அருமையான முறையில் கேட்ச் செய்து அவுட்செய்தார்.

பிறகு விக்கெட் கீப்பர் பெளச்சரும், ரோட்ஸும் சேர்ந்து அடித்து ஆடத் துவங்கினர்.இருவரையும் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் சிறிது திணறினர். பெளச்சர்அருமையாக ஆடி 60 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் ரோட்ஸ் 32 ரன்களைக்குவித்தார். அவரை டெண்டுல்கர் பந்தில் திகிலூட்டும் விதத்தில் வளைந்து பிடித்துவழியனுப்பி வைத்தார் வெங்கடேச பிரசாத்.

இவர்களுக்குப் பின்னர் குளூஸ்னர் சிறிது நேரம் களத்தில் இருந்து 29 ரன்களைச்சேர்த்தார். இறுதியில் 41 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்கா சுருண்டது. அது எடுத்தமொத்த ரன்கள் 200.

இந்தியத் தரப்பில், அகர்கர், ராபின் சிங்கைத் தவிர அனைத்து பந்துவீச்சாளர்களும்விக்கெட்டுகளைத் தட்டிச் சென்றனர். குறிப்பாக ஜாஹீர் கான், கும்ப்ளே, சச்சின்டெண்டுல்கர் ஆகியோர் அபாரமாக பந்துவீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.யுவ்ராஜ் சிங், பிரசாத், கங்குலி ஆகியோருக்குத் தலா ஒரு விக்கெட் கிடைத்தது.

ஆஸ்திரேலியாவுடனான போட்டியை விட தென் ஆப்பிரிக்காவுடனான போட்டிமிகவும் விறுவிறுப்பாக இருந்தது. இந்திய அணியினர் அனைத்து துறையிலும்அபாரமாக ஆடி அணியை இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்றனர். ஆட்ட நாயகனாககேப்டன் கங்குலி தேர்வு செய்யப்பட்டார்.

ஞாயிற்றுககிழமை 15-ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், நியூசிலாந்துஅணியை இந்தியா சந்திக்கிறது.

சுருக்கமான ஸ்கோர்:

இந்தியா - 295 (கங்குலி 141).

தெ.ஆப்பிரிக்கா - 200 (பெளச்சர் 68).

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+