இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது: பிரதமர் பெருமிதம்
உலக அளவில் பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரித்ததால் தான் பெட்ரோல், டீசல், காஸ்,மண்ணெண்ணெயின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது என பிரதமர் வாஜ்பாய்கூறினார்.
மத்தியில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஆட்சி இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைப்பதைத் தொடர்ந்துவாஜ்பாய் மருத்துவமனையில் இருந்தவாரே அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நாட்டின் சுமையில் பெரும் பகுதியை வசதி படைத்தவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும். இல்லாதவர்கள் மீதுசுமையை ஏற்ற முடியாது. நாட்டின் பொருளாதாரத்தை மாற்றி அமைத்து வருகிறோம். இந்த சீர்திருத்தங்கள்எளிமையானவையாக இல்லை. சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.இதை நாம் அனைவரும் இணைந்து தான் சமாளிக்க வேண்டும்.
எனது அரசு ஊழல் செய்யவில்லை. எந்த விஷயத்திலும் ஒளிவு-மறைவு இல்லாமல் செயல்பட்டுக்காட்டியிருக்கிறோம். மாநிலங்களுடன் நல்லுறவைப் பேணி இருக்கிறோம்.
காஷ்மீர், வட-கிழக்கு இந்தியாவில் அமைதி திரும்பி வருகிறது. காஷ்மீர் விஷயத்தில் நமக்கு ஆதரவு பெருகிவருகிறது. நாட்டின் பொருளாதாரமும் வளர்ந்து வருகிறது. இதுவரை எந்தப் பலனையும் அனுபவிககாத ஏழைமக்களுக்கு பலன்கள் போய்ச் சேர வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளேன்.
இதுவரை இல்லாத அளவுக்கு நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. ஒரு வளர்ந்து வரும் சக்தியாக இந்தியாவை உலகம்பார்க்க ஆரம்பித்துவிட்டது.
இவ்வாறு வாஜ்பாய் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications