நெடுமாறனை அனுப்புவதா? ஜெ. ஆவேசம்
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை மீட்க நெடுமாறனையும் மற்றும் இருவரையும் காட்டுக்கு அனுப்பியிருப்பதை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாகுறைகூறியிருக்கிறார்.
வெள்ளிக்கிழமை அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் ஒரு பகுதியையும், இலங்கையின் மறுபகுதியையும்இணைத்து ஒரு தனித்தமிழ்த்தேசம் உருவாக்கி அதன் அதிபராக வேண்டும் என்பதுதான் கருணாநிதியின் ஆசை என்று 4-7-2000 மற்றும் 10-07-2000தேதியிட்ட அறிக்கைகளில் நான் தெரிவித்திருக்கிறேன்.
ஈரோட்டில் கடந்த ஜூலை முதல் வாரத்தில் நடைபெற்ற மாநாட்டில் ம.தி.மு.க தொண்டர்கள் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின்தலைவன் பிரபாகரன் பேட்ஜ் அணிந்து வந்ததையும், மாநாட்டில் கலந்து கொண்ட கருணாநிதி ம.தி.மு.க தொண்டர்களை என் குழந்தைகள். நான்பெற்றெடுத்த மாணிக்கங்கள் என்று புகழ்ந்ததையும், ம.தி.முகவும், தி.மு.கவும் வேறல்ல நானும் வைகோவும் ஒன்றுதான் என்றுபிரகடனப்படுத்தியதையும் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
அதன் அடிப்படையில் கருணாநிதி கனவு காணும் தமிழ்த்தேசத்தை உருவாக்க துணை நிற்பவர்களைப் பெருமைபடுத்தவும் அரிய சாதனைகள் செய்ததாகநம்பவைக்கும் தேசவிரோத கொடுமைகளை நிகழ்த்தவும் தொடங்கிவிட்டார்.
பிரிவினை வாதம், தீவிரவாதம் போன்ற ஆபத்தான போக்குகள் கொண்ட தமிழ்த் தேசீயவாதி நெடுமாறன் போன்றவர்களை அரசுத் தூதுவராககடத்தல்காரன் வீரப்பனிடம் அனுப்பி வைத்ததற்கு மேற்சொன்னதைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்?
இந்தியா ஏற்காத தமிழ் ஈழ ஆதரவாளர்களிடம் இரு மாநில அரசுகளும் ராஜ்குமாரை மீட்டு வரும் பொறுப்பை ஒப்படைத்தது விஷமச்சக்தியிடம்அடிபணிந்ததையே எடுத்துக்காட்டுகிறது.
தேசத்தின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கேடு இழைக்கும் கொடுமைகள் அரங்கேறும் மாநிலமாகத் தமிழ்நாட்டின் நிலைமைஅலங்கோலமாகி விட்டது.
உலக மகா கிரிமினல்களின் கொட்டத்தை அடக்க முடியாமல் கோலோச்சுபவர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். ராஜ்குமாரை கடத்திவைத்துக்கொண்டு தேசத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தீய சக்திகளின் ஆதிக்கம் சகிக்கமுடியவில்லை.
நான்கு முறை அரசுத்தூதர் என்று சொல்லிக்கொண்டு நக்கீரன் கோபால் நடத்திய நாடகங்கள் முடிவு பெற்று, கோபாலோடு தேச ஒற்றுமையைசற்றும் கருதாத விடுதலைப்புலிகளின் நண்பர்கள் உள்ளிட்ட மூவரும் இந்தக் கடத்தல் நாடகத்தில் வேஷம் கட்டி விடப்பட்டுள்ளனர்.
கோபாலோடு புதிய தூதுவர்களாகப் புறப்பட்டு இருக்கும் நெடுமாறன், போராசிரியர் கல்யாணி, சுகுமாறன் ஆகியோர் விடுதலைப்புலிகளின் பால் பேரன்புகொண்டவர்கள்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு பிரச்சாரம் செய்துவரும் இவர்கள், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கு எதிரான சிந்தனைஉடையவர்கள். இந்தியாவுக்கு எதிரான பேரழிவுச்சக்திகளின் பிரதிநிதியாக விளங்கும் இந்த மூவரும், அரசின் தூதுவர்களாக அனுப்ப சம்மதித்தது எப்படிஎன்பதை கருணாநிதிதான் விளக்க வேண்டும்.
ஆரம்ப காலம் முதலே விடுதலைப்புலிகளின் பால் கருணாநிதி காட்டும் பரிவுக்கு இந்த மூவரையும் அரசுத்தூதுவர்களாக அனுப்பியதே போதியசான்றுகளாகும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications