தனது கட்சியை ஆட்சியமைக்க அழைத்தார் சந்திரிகா
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, தனது கட்சி தலைமை வகிக்கும் மக்கள்கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் கூட்டணி அதிக இடங்களில்வெற்றி பெற்றது. இதையடுத்து தனிப் பெரும் கட்சியாக மக்கள் கூட்டணி உருவானது.இதனால் யாரை ஆட்சி அமைக்க அதிபர் சந்திரிகா அழைப்பார் என்ற எதிர்பார்ப்புஎழுந்தது. இந்த நிலையில் தனது கூட்டணியையே ஆட்சி அமைக்க அழைத்துள்ளார்சந்திரிகா.
வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் தற்போதைய பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகேமீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும்அமைச்சரவை உடனடியாக அமைக்கப்படுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயகே இறந்துள்ளதால் இலங்கையில்தற்போது துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. எனவே அமைச்சரவை பதவியேற்புசனிக்கிழமைக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. சனிக்கிழமைதான் ஸ்ரீமாவோவின்உடல் தகனம் செய்யப்படவுள்ளது. தேர்தல் நடந்த செவ்வாய்க்கிழமை ஸ்ரீமாவோஇறந்தார்.
1994-ம்ஆண்டு முதல் மக்கள் கூட்டணி ஆட்சியில் இருந்து வருகிறது. பெரும்பான்மபலத்திறகு இன்னும் பற்றாக்குறை இருக்கும் நிலையில், தனது கூட்டணியைஆட்சியமைக்க அழைத்துள்ளார் சந்திரிகா.
மக்கள் கூட்டணிக்கு 107 இடங்கள் கிடைத்துளளன. முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கியதேசியக் கட்சி 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் அதிகஇடங்களைப் பெற்றுள்ள கூட்டணி என்ற அடிப்படையில் மக்கள் கூட்டணியைஆட்சியமைக்க அழைத்ததாக அதிபர் சந்திரிகா டிவிக்கு அளித்த பேட்டியில்கூறியிருக்கிறார்.
தமிழ் கட்சி ஆதரவு:
மக்கள் கூட்டணி ஆட்சி அமைத்தால் ஆதரவு தருவதாக, ஈழம் மக்கள் ஜனநாயகக்கட்சி ஏற்கனவே உறுதி கூறியுள்ளது. இக்கட்சிக்கு ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர்.
இக்கட்சி தவிர, முஸ்லீம் தேசிய ஐக்கிய கூட்டணியுடனும் மக்கள் கூட்டணி பேச்சுநடத்தி வருகிறது. இக்கூட்டணிக்கு 10 எம்.பிக்கள் உள்ளனர்.
மீண்டும் மக்கள் கூட்டணியே ஆட்சிக்கு வரவுள்ள நிலையில் 17 ஆண்டுகளுக்கும்மேலாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினையில் அரசின் அணுகுமுறை எப்படியிருக்கும்என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விடுதலைப் புலிகளை ஒடுக்க நினைக்கும் அதே நேரத்தில் சிறுபான்மைதமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கவும் சந்திரிகா திட்டமிடுகிறார். இம்முறைஇதுதொடர்பான முயற்சிகளில் அவர் தீவிரமாக ஈடுபடுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications