அமெரிக்க கடற்படைக் கப்பல் தகர்ப்பு: 17 வீரர்கள் பலி
ஏமன்:
ஏமன் கடலில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கக் கப்பல் மீது கடும் தாக்குதல் நடத்தினர்தற்கொலைப் படையினர். இதில் 17 அமெரிக்க கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
வியாழக்கிழமை நடந்த இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும்பொறுப்பேற்கவில்லை. இதையடுத்து கடற்படையை அங்கிருந்து உடனடியாகவெளியேற அமெரிக்க அதிபர் கட்டளையிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் குறித்து உடனடியாக விசாரித்த எப்.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளார்கிளின்டன்.
வளைகுடாவில் ஈரான், இராக், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் தீவிரவாதஅமைப்புகள் அமெரிக்காவை எதிர்த்து வருகின்றன. இப்போதுபாலஸ்தீனியர்களுக்கும் அமெரிக்க ஆதரவைப் பெற்ற இஸ்ரேலுக்கும் இடையே கடும்மோதல் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
அதே போல இஸ்லாமிய தீவிரவாதத்தின் தலைமையகமானஆப்கான்-ரஷ்ய-பாகிஸ்தானிய எல்லை உருவாகி வருகிறது.
எந்தக் கும்பல் தாக்குதல் நடத்தியது என்று இதுவரை தெரியவில்லை. ஆனால், இதுஇஸ்லாமியத் தீவிரவாதிகளின் செயல் தான் என அமெரிக்கா கருதுகிறது.
குறிப்பாக ஒசாமா பின் லேடன் மீது சந்தேகம் வலுத்துள்ளது.
ஏமனில் எரிபொருள் நிரப்புவதற்காக இந்த கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. இது த நவீனதாக்குதல் கப்பலாகும்.












Click it and Unblock the Notifications