For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போக்குவரத்து ஸ்டிரைக்: 5 பஸ்கள் உடைப்பு, 350 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக சென்னையில் 5 பஸ்கள் உடைக்கப்பட்டன. பலஇடங்களில் ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தடியடி நடத்தி போலீசார்கலைத்தனர். 350 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழக அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ்அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை உயர்த்த வேண்டும் என்று அரசுக்குஅ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அரசுஏற்க மறுத்ததால் பஸ் ஊழியர்கள் சனிக் கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் நடந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை சமாளிக்க அரசுமுன்கூட்டியே தயார் நிலையில் இருந்தது. எல்லா போக்குவரத்துக் கழகங்களிலும்பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பஸ்களை வழக்கம் போல் இயக்குவதற்குதேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

ஆனாலும், பல இடங்களில் வழக்கமாக ஓடும் எண்ணிக்கையை விட குறைவானஅளவில் தான் பஸ்கள் இயங்கின. பஸ் ஊழியர்கள் பல பகுதிகளில் வேலைக்குவரவில்லை. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களும், அவர்களது தோழமைக் கட்சிசங்கத்தினர் மட்டுமே பணிக்கு வந்தனர்.

ஆனால், 95 சதவீத பஸ்கள் ஓடின என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்முடிதெரிவித்தார். ஸ்டிரைக் குறித்து அவர் கூறுகையில், இந்த ஸ்டிரைக்கினால் தமிழகத்தில்எந்த பாதிப்பும் இல்லை. சென்னை நகரில் 80 சதவீதம் பஸ்கள் ஓடுகின்றன.

ஈரோடு, சேலம், புதுக்கோட்டை, கும்பகோணம், விருதுநகர், தர்மபுரி, காரைக்குடிபோன்ற பகுதிகளில் 100 சதவீத பஸ்களும் இயக்கப்பட்டன. நெல்லையில் மட்டும்தான் போராட்டத்திற்கு ஓரளவு ஆதரவு இருந்தது.

மேற்கு வங்காளம், கேரளாவை விட அதிகமான போனஸ் இங்கு வழங்கப்படுகிறது.ஆனாலும், கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.

தி.மு.க. ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தலா 12 சதவீதம் போனஸ் அதிகரித்துவழங்கப்பட்டுள்ளது. 20 சதவீதத்திற்கு மேல் போனஸ் வழங்கக் கூடாது என்பதுசட்டம். எனவே இதற்கு மேல் உயர்த்த இயலாது. மேலும் டீசல் விலை உயர்த்தப்பட்டநேரத்தில் பொதுமக்கள் மீது சுமையை திணிக்க அரசு விரும்பவில்லை என்றார்பொன்முடி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X