சவூதி அரேபிய விமானம் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
கெய்ரோ:
சவூதி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் சனிக்கிழமை கடத்திச்செல்லப்பட்டது.
சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவிலிருந்து லண்டனுக்குச் சென்று கொண்டிருந்தஇந்த விமானம், எகிப்து வான் எல்லைக்கு வெளியே கடத்தப்பட்டதாகக்கூறப்படுகிறது.
விமானத்தைக் கடத்தியவர்கள் சிரியா தலைநகர் டமாஸ்கஸுக்கு விமானத்தை ஓட்டிச்செல்லும்படி கூறியதாக கெய்ரோ விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானிதகவல் தெரிவித்துள்ளார்.
ஆனால், டமாஸ்கஸ் விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்க சிரியா அரசுஅனுமதி மறுத்துவிட்டது. இதையடுத்து சிரியா வான் எல்லைக்குள் விமானம் சுற்றிவருகிறது.
விமானத்தில் எவ்வளவு பேர் இருந்தனர். அவர்களின் தற்போதைய நிலை என்னஎன்பது பற்றி தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications