அத்வானி, பெர்னாண்டஸ் காஷ்மீர் பயணம்
ஸ்ரீநகர்:
உள்துறை அமைச்சர் அத்வானியும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டசும் இம்மாதம் 22-ம் தேதி ஜம்மு -காஷ்மீர் செல்ல உள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் எல்லையைக் கடந்து தீவிரவாதிகள் ஊடுறுவல்அதிகரித்திருப்பதையடுத்து நிலைமையை நேரில் ஆராய உள்துறை அமைச்சர்அத்வானியும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசும் இம்மாதம் 26-ம்தேதி ஜம்மு - காஷ்மீர் செல்ல இருக்கின்றனர்.
இவர்கள் அங்கு செல்வதற்கு மேலும் ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. பாதுகாப்புப்படை வீரர்கள் மனித உரிமைகளை மீறுவதாக வரும் குற்றச்சாட்டு குறித்தும், எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தானிய படைகள் கடும் தாக்குதல் நடத்திவருவதால் அங்கு வாழும்மக்களை வேறு இடங்களுக்கு குடியமர்த்து குறித்து நேரில் அறியவும் அமைச்சர்கள்ஜம்மு -காஷ்மீர் செல்வதாகவும் கூறப்படுகிறது.
தேடுதல்பணி என்ற பெயரில் ராணுவத்தினர் கடுமையான முறையில் பொதுமக்களிடம்நடந்து கொள்வதும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஸ்ரீகரிலுள்ள ஒருங்கிணைந்த பாதுகாப்பு தலைமையக்ததில் நடைபெறும் கூட்டத்தில்இரு அமைச்சர்களும் கலந்து கொள்வர் என கூறப்டுகிறது. இந்த அலுவலகம் தான்மாநில பாதுகாப்பு குறிதத அனைத்து முடிவுகளையும் எடுக்கும அதிகாரம் படைத்தது.
இந்த அமைப்புக்கு ஜம்மு - காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாதான் தலைவர்.இதற்கான ஆலோசனைக் குழுவில் ராணுவத்தைச் சேர்ந்தவர்களும், புற்காகவல்படையைச் சேர்ந்தவர்களும், போலீஸ துறையைச் சேர்ந்தவர்களும்,புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருபபார்கள்.
காஷ்மீரில், பாகிஸ்தானின் தாக்குதலால் இதுவரை 83,000 பேர் அங்கிருந்து வேறுஇடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்..












Click it and Unblock the Notifications