ராமதாஸ் அரசியலிலிருந்து விலகும் வரை ஓயமாட்டேன்
கோவை:
அரசியலில் இருந்து ராமதாஸ் விலகும்வரை நான் ஓயமாட்டேன் என தமிழக ராஜீவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடிராமமூர்த்தி, கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸுக்கும், எனக்கும் இடையேநடைபெற்றுவரும் மோதலை நாங்களாகவே தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனமுதல்வர் கூறியுள்ளார்.
எனக்கும் மோதலில் விருப்பம் இல்லை. எங்களுக்கிடையே கூட்டணி பிரச்சினையோ,அரசியில் பிரச்சினையோ நிலவவில்லை. ராமதாஸ் தன்னை வன்னிய சமுதாயத்தின்குத்தகைதாரர் போல் கருதி செயல்பட்டு வருகிறார்.
அவர் வன்னிய சமுதாயத்தினருக்கு எந்த விதமான நன்மையும் செய்யவில்லை.வன்னிய சமுதாய மக்களை தன் சொந்த நலனுக்காகவும், தன் குடும்ப நலனுக்காகவும்பயன்படுத்தி வருகிறார். வன்னிய மக்கள் எந்த விதமான ஆதரவும் இன்றி தவித்துவருகிறார்கள்.
இதை எதிர்த்துத்தான் நான் போராடுகிறேன். ராமதாஸ் பொதுவாழ்க்கையை விட்டுவிலக வேண்டும். அது வரை என் போராட்டம் தொடரும். எங்கள் இருவருக்கும்இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினையால் கூட்டணிக்கு எந்த விதமான பாதிப்பும்ஏற்படாது.
சென்னையில் ராமதாஸிடம் நிருபர்கள் கேட்டபோது தி.மு.க. கூட்டணியை விட்டுவிலக மாட்டேன் என்று கூறினார். அ.தி.மு.க.விற்கு போக மாட்டீர்களா எனகேட்டதற்கு மவுனம் சாதித்தலிருந்து அவர் அ.தி.மு.க. வுக்கு போகவும் தயாராகஇருக்கிறார் என்பதையே காட்டுகிறது.
கூட்டணியில் இருந்து கொண்டே கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக குழி பறிக்கும்வேலையையும் த.ரா.கா. செய்யாது. அ.தி.மு.க. கூட்டணியை தலைமை ஏற்று நடத்ததகுதியானவர் ஜெயலலிதாதான். அ.தி.மு.க.வுக்குதான் அந்த கூட்டணியிலேயே 5சதவீதம் ஓட்டு இருக்கிறது. அவருக்குதான் மக்கள் செல்வாக்கும் இருக்கிறது.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு பிறகு அவர் தேர்தலில் போட்டியிடமுடியுமா முடியாதா எனவே கூட்டணி கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.
நரசிம்மராவுக்கு எதிராக வந்த தீர்ப்பு நல்ல தீர்ப்பு. காங்கிரசுக்காக அவர் இதைச்செய்தார் என்பது தவறு. எந்த காங்கிரஸ் தலைவரும் இது மாதிரி செய்ததில்லை. இதுஅநாகரீகமான செயல் என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.












Click it and Unblock the Notifications