கையில்லாமல் பிறந்த குழந்தைக்கு கை கொடுத்த டாக்டர்
காலாலம்பூர்:
கையில்லாமல் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு இறந்துபோன குழந்தையின் கையைப் பொறுத்திக்காட்டி சாதனை புரிந்துள்ளார் தமிழ் டாக்டர்.
5 மாதங்களுக்கு முன் கோலாலம்பூரில் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. இப்போது லி-ஜெங் என்றஅந்தக் குழந்தை பிற குழந்தைகளைப் போல ஆரோக்கியத்துடன் வாழ்கிறது.
கோலாலம்பூரில் சீன தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இதில் ஒரு குழந்தை மூளைசேதமடைந்து இறந்தே பிறந்தது. மற்றொரு குழந்தைக்கு இடது கை இல்லை.
இடது கை இல்லாத குழந்தைக்கு இறந்த குழந்தையின் கையை எடுத்துப் பொறுத்த முடிவு செய்தனர்.இந்தப் பணி மைக்ரோ சர்ஜனான டாக்டர் பத்மநாதனிடம் தரப்பட்டது. அவர் சுமார் 15 மணி நேரம்போராடி கையை குழந்தைக்குப் பொறுத்தினார்.
அப்போது அந்தக் குழந்தைக்கு வயது வெறும் 4 வாரங்களே. செலயாங் மருத்துவமனையில் 55 பேர்கொண்ட பெரிய டீம் பத்மநாதன் தலைமையில் 15 மணி நேரம் போராடி சாதனை படைந்தது.
கை அறுவை சிகிச்சை நடந்த முதல் வாரத்தில் அந்தப் பிஞ்சுக் கரம் வீங்க ஆரம்பித்துவிட்டது.பின்னர் சிகிச்சைகள் கொடுத்து வீக்கத்தைக் குறைத்தோம். இப்போது கை வளர்கிறது. முட்டுமடங்குகிறது என சந்தோஷமாய் சொல்கிறார் பத்மநாதன்.
இப்போது வாரம் ஒரு முறை மருத்துவ சோதனைக்காக அந்தக் குழந்தை மருத்துவனைக்கு அழைத்துவரப்படுகிறாள். அவளை படம் பிடிக்க பத்திரிக்கையாளர்கள் போட்டிபோட்டி வருகின்றனர்.
பத்மநாதன் அவளின் கையை பிடித்தால், தனது தாயிடம் முறையிடுகிறாள், தனது குட்டிக் கண்களைவிரித்துக் கொண்டு. இதற்குக் காரணமும் உள்ளது. கையில் சில நரம்புகள் சரியாகும் வரை அவளதுகையைத் தொட்டாலே யாரே முட்டியில் இடித்தது போன்ற வலியும் உணர்வும் அவளுக்கு ஏற்படும்.
விரல்களை முறையாக இயங்க வைக்கும் 3 முக்கிய நரம்புகளில் ஒன்று சரியாக இயங்கவில்லை.விரைவிலேயே இதுவும் குணமடையும் என நம்புகிறோம். ஆனால், எதையும் உறுதியாகக் கூறமுடியாது என்கிறார் பத்மநாதன்.
உலகிலேயே குழந்தைக்கு மற்றொரு குழந்தையின் கையை பொறுத்திய முதல் அறுவை சிகிச்சை இதுதான். இந்த வாரம் பத்மநாதன் சிங்கப்பூர் வருகிறார். 22வது சர்வதேச அறுவை சிகிச்சை நிபுணர்கள்மாநாட்டில் கலந்து கொள்ளும் அவர் குழந்தைக்கு கையை பொறுத்தியதை விளக்குவார்.
இதுவரை சுமார் 300க்கும் மேற்பட்ட கை, கால் பொறுத்தும் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார்பத்மநாதன்.
அந்தக் குட்டிக் குழந்தையின் குட்டிக் கரம் நன்றாக செயல்பட வாழ்த்துவோம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications