மேட்ச் பிக்ஸிங்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தாமதமாகும் - சிபிஐ
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பான விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம்சமர்ப்பிக்க மேலும் சில காலம் ஆகும் என்று சிபிஐ அதிகாரிகள்தெரிவித்தனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது மேட்ச் பிக்ஸிங்குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன.
இலங்கையில் நடைபெற்ற சிங்கர் கோப்பைக் கிரிக்கெட்டின்போது தனக்குரூ.25 லட்சம் லஞ்சம் கொடுக்க முன் வந்ததாக கபில்தேவ் மீது மனோஜ்பிரபாகர் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பும், சர்ச்சையும்ஏற்பட்டன. இந் நிலையில், மேட்ச் பிக்ஸிங் தொடர்பான குற்றச்சாட்டைவிசாரிக்கும்படி சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன்பேரில் கடந்த 6 மாதமாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. பலமுன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரிய முன்னாள் மற்றும் இந்நாள் அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணைநடத்தப்பட்டது.
இம் மாத இறுதியில் தனது விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம்சிபிஐ தாக்கல் செய்யும் என்று கூறப்பட்டது. சிபிஐ விசாரணைஅறிக்கையில் கபில் தேவ் மீறப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும்இல்லை என்றும் ஆனால், மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக 4 கிரிக்கெட்வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால், விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யமேலும் கால அவகாசம் பிடிக்கும் என்று சிபிஐ அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
விசாரணை அறிக்கையில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதையும், யார்அந்த 4 வீரர்கள் என்பதையும் சொல்லமுடியாது என்று அவர்கள்கூறிவிட்டனர்.
எங்களுடைய வேலை மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுக்கள் குறித்துவிசாரணை நடத்தவேண்டியதுதான். விசாரணையை முடித்து மத்தியஅரசிடம் அறிக்கையை தாக்கல் செய்துவிடுவோம்.
அதன்பிறகு மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட வீரர்களின் பெயர்களைவெளியிடுவதோ, வெளியிடாமல் இருப்பதோ மத்திய அரசின் விருப்பம்என்று அவர்கள் கூறிவிட்டனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications