இஸ்ரேல், பாலஸ்தீன பேச்சு: கெய்ரோ சென்றார் கிளிண்டன்
கெய்ரோ:
எகிப்திலுள்ள ஷாம் அல் ஷேக் என்ற இடத்தில் இஸ்ரேல் பிரதமர் எஹத் பாரக்,பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் ஆகியோருக்கு இடையே திங்களிழமை அமைதிப்பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் கிளிண்டனும் கலந்துகொள்கிறார்.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே நடந்து வரும் வன்முறையில் இதுவரை 100 பேர்இறந்துள்ளனர். வன்முறையைத் தணிக்கவும், மேற்கு ஆசிய அமைதிப்பேச்சுவார்த்தையை தொடரவும் ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா முயற்சிமேற்கொண்டுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் கிளிண்டன்,எகிப்து தலைநகர் கெய்ரோ வந்து சேர்ந்தார். சில நாட்களுக்கு முன் மேற்கு ஆசியவிவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் கூறுகையில், பாலஸ்தீனர்களும்,இஸ்ரேலியர்களும் வன்முறையைக் கைவிட்டு அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபடவேண்டும் எனக் கூறியிருந்தார்.
அதன்படி அமைதிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட இரு நாட்டு தலைவர்களும்சம்மதித்தனர். பேச்சுவார்த்தை திங்கள்கிழமை எகிப்திலுள்ள ஷாம் அல் ஷேக் நகரில்துவங்குகிறது.
இஸ்ரேல் பிரதமர் எஹூத் பாரக், பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் ஆகியோருக்குஇடையே நடக்கவுள்ள இப்பேச்சுவார்த்தையில், எகிப்து அதிபர் முபாரக், ஜோர்டான்மன்னர் அப்துல்லா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இவர்களுடன் கிளிண்டனும்பங்கேற்கிறார்.
செப்டம் 28-ம் தேதி வரை நடைபெற்ற வன்முறையில் இதுவரை 100 பேர்கொல்லப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமையன்று புதிதாக எந்த வன்முறையும்நடைபெறவில்லை.
பேச்சுவார்த்தை குறித்து எகிப்து அரண்மனை அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்தகூட்டம் நான்கு மனிநேரம் நடக்க உள்ளது. பேச்சுவார்த்தை (இந்திய நேரப்படி) மாலை3.30 மணிக்கு கோல்ப் ரிசார்ட் ஓட்டலில் துவங்க உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டம் வெற்றிகரமாக முடியும் என உத்திரவாதம் அளிக்க முடியாது என எகிப்துவெளியுறவுத்துறை அமைச்சர் மெளசா ஞாயிற்றுக்கிழமை இரவு தெரிவித்தார்.
முன்னதாக, சனிக்கிழமை பேச்சுவார்த்தை குறித்து கிளிண்டன் கூறுகையில், கூட்டத்தின்முக்கிய நோக்கம் வன்முறையை நிறுத்துவதும், மேற்கு ஆசியாவில் அமைதியைஏற்படுத்துவதும், இந்த வன்முறை எதனால் துவங்கியது என்பதற்கான உண்மையைகண்டறிவதும், இதற்கு பேச்சு வார்த்தை மூலம் எவ்வாறு முடிவு காண்பதுஎன்பதும்தான் என்றார்.
விசாரணை கோருகின்றனர் பாலஸ்தீனர்கள்:
இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக சர்வதேசஅளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாலஸ்தீனம் கோரிக்கைவிடுத்துள்ளது.
பேச்சுவார்த்தையில் ஈடுபடும் பாலஸ்தீன பிரதிநிதிகளில் ஒருவரான சகேப் இரிகாட்கூறுகையில், வன்முறை தொடர்பாக சர்வதேச நாடுகளின் விசாரணையை அராபத்கோருவார். தொடரும் வன்முறை காரணமாக அக்டோபர் 4-ம் தேதி அமெரிக்கவெளியுறவுத்துறை செயலாளர் மெடாலின் அல்பிரைட் தலைமையில் அராபத் - பாராக்இடையே நடைபெற இருந்த பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதுஎன்றார்.
இதற்கிடையே, டி.விக்கு அளித்த பேட்டியில், அல்பிரைட் கூறுகையில், இந்தபேச்சுவார்த்தை வெற்றி பெறும் என நம்புகிறோம். பேச்சுவார்த்தையின் முக்கியநோக்கம், வன்முறையை நிறுத்தி பழையபடி அமைதியைக் கொண்டு வருவதுதான்எனக் கூறியுள்ளார்.
போராக மாறும் .. எச்சரிக்கிறது ரஷ்யா
தற்போது பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் வன்முறையில்100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது அரபு - இஸ்ரேலுக்கிடையே பெரும் போராகமாறும் அபாயம் உள்ளது என ரஷ்யா அச்சம் தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications