ஜெயலலிதா,சசிகலா மீது மேலும் ஒரு புதிய வழக்கு!
சென்னை:
முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாமீதும், அவரது தோழிசசிகலாமீதும் புதிய வழக்கு தொடரப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
ஜெயலலிதா, சசிகலா இருவருக்கும் சொந்தமாக நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைரநகைகள் உள்ளன. இவைகள் தனி நீதிமன்றத்தினால் முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகஇவர்கள் இருவரும் வருமான வரித்துறையிடம் சொத்து வரிக்கணக்கை தாக்கல் செய்யஇயலவில்லை.
வருமானத்திற்கு அதிகமாக 66.65 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா,அவரது தோழி சசிகலா, மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இது குறித்த வழக்கு தனிநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக போயஸ் தோட்டத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் வீடுகளில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வெள்ளி நகைகள்கைப்பற்றப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில், சென்னை ரிசர்வ் வங்கியில் வைக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா கடைசியாக தனது சொத்துக் கணக்கை 92- 93-ம் ஆண்டு சமர்பித்தார். அதன் பிறகுசொத்து கணக்கை தாக்கல் செய்யவில்லை.
93-94-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சொத்து வரிக்கணக்கை சமர்பிக்கும் படிபல முறை கேட்டுக் கொண்டபோதும் அவர் சமர்பிக்கவில்லை.
இதனால் எக்ஸ்பார்ட்டி என்று கருதி ஜெயலலிதா, சசிகலாவுக்கு மூன்று கோடி ரூபாய் சொத்துஇருக்கும் என கணக்கிடப்பட்டு, அதற்காக 4 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் சொத்து வரிவிதிக்கப்பட்டது. ஆனால் இந்த தொகையும் கட்டப்படவில்லை.
93-94-ம் ஆண்டைத்தவிர ஜெயலலிதா.சசிகலாவுக்கு சொந்தமான நான்கு கோடி ரூபாய் நகைகளைமதிப்பீடு செய்ய இயலாத காரணத்தால்தான் மற்ற ஆண்டுகளுக்கான சொத்துவரி கணக்கை தாக்கல்செய்ய முடிவவில்லை.என கூறப்படுகிறது.
இந்த நகைகளை மதிப்பீடு செய்ய பதிவு பெற்ற நகை மதிப்பீட்டாளர்கள் நியமிக்கக் கோரிஜெயா.சசி இருவரும் கேட்டுக் கொண்டதன் பேரில் உம்மிடி நந்த கோபால் என்ற பதிவுபெற்ற நகைமதிப்பீட்டாளர் நியமிக்கப்பட்டார்.
இவர் மதிப்பீடு செய்யும் முன்னரே இறந்து விட்டார். அதன் பிறகு பல நகை மதிப்பீட்டாளர்களும்நகையை மதிப்பீடு செய்ய மறுத்து விட்டனர்.நீதிமன்றம் இவர்களே நகை மதிப்பீட்டாளர்களைநியமித்துக் கொள்ளலாம் எனக் கூறிய பிறகும் இவர்கள் மவுனம் காத்து வருகின்றனர்.
சொத்துவரிக் கணக்கை தாக்கல் செய்யாததால் முன்னரே ஜெயலலிதா. சசிகலா மீது எழும்பூர்பெருநகர் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மற்ற ஆண்டுவருமான கணக்கை காட்டாமல் இருப்பதால் வருமான வரித்துறையினர் புதிய வழக்கை தொடரும்வாய்ப்புகள் இருக்கின்றன.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications