ராஜ்குமார் விடுதலை?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீரப்பன் பிடியிலிருந்து நடிகர் ராஜ்குமார் ஞாயிற்றுக்கிழமை இரவுவிடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், அவரும் தூதர்களும் இன்னும் காட்டுப்பகுதியைவிட்டு வெளியே வரவில்லை என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
அவருடன் கடத்தப்பட்ட நாகேஷ், கோவிந்தராஜூ ஆகியோரும் விடுவிக்கப்பட்டதாகதகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுவிக்கப்பட்டுவிட்டாலும் கூட இந்த மூன்று பேரும் இன்னும் காட்டுக்குள் தான்உள்ளனர். அவர்கள் எந்த நேரத்தலும் ஈரோடு காட்டுப் பகுதியில் உள்ள தலைமலைபகுதிக்கு அழைத்து வரப்படுவார்கள் என கர்நாடக அரசு மூத்த அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.
இவர்களை அழைத்து வர 6 கார்கள் சென்றுள்ளதாகவும் கூறினார்.
ஆனால், முன்னதாக வந்த தகவல்களின்படி ஞாயிற்றுக்கிழமை இரவிவே இவர்கள்தலைமலை காட் ரோடு வழியாக சென்னைக்குப் புறப்பட்டதாகக் கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications