கிருஸ்தவம் மதமல்ல..அது ஒரு அரசியல் இயக்கம்: ஆர்.எஸ்.எஸ். கடும் குற்றச்சாட்டு
ஆக்ரா:
கிருஸ்துவம் மதமல்ல, அது ஒரு அரசியல் அமைப்பு என ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்ஷன் கடுமையாக குற்றம்சாட்டினார்.
சமீப காலமாகவே கிருஸ்தவ அமைப்புகள் மீதும், தொண்டு அமைப்புகள் மீதும் ஆர்.எஸ்.எஸ். தாக்குதல் தொடுத்துவருகிறது. மத்தியில் பா.ஜ.க. அரசு அடக்கி வாசிக்கச் சொன்னாலும் கிருஸ்தவ மதத்தையே ஆர்.எஸ்.எஸ். அடிக்கடி வாதப்பொருளாக்கி வருகிறது.
கடந்த 3 நாட்களாக ஆக்ராவில் ஆர்.எஸ்.எஸ். மாநாடு நடந்தது. ஆர்.எஸ்.எஸ்சின் 75வது ஆண்டை ஒட்டி இந்த மாநாடுநடந்தது. 75,000 பேர் இதில் கலந்து கொண்டனர். மாநாட்டின் இறுதி நாளான ஞாற்றுக்கிழமை இந்த அமைப்பின் தலைவர்சுதர்ஷன் பேகையில் கிருஸ்தவ அமைப்புகளைக் கடுமையாகத் தாக்கினார்.
அவர் கூறுகையில், முஸ்லீம்களையும், கிருஸ்தவர்களையும் இந்தியர்களாக்குவது தான் ஆர்.எஸ்.எஸ்சின் வேலையே.உள்நாட்டு, வெளிநாட்டு தீய சக்திகளிடமிருந்த நாட்டை காக்க வேண்டும். மதமாற்றத்தைத் தூண்டும் சர்ச்சுகள்,அமைப்புகளால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய மாடல் பொருளாதாரம் நமக்கு ஒத்து வராது. இதைமத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
வழக்கமாக அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையில் தீவிர முழக்கமிடும் ஆர்.எஸ்.எஸ். மாநாட்டு இந்த முறை அதைமறந்தேவிட்டது. இந்தப் பிரச்சனையை கிளப்பினால் மத்தியில் பா.ஜ.க. அரசுக்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அதைசுதர்ஷன் கண்டு கொள்ளவில்லை. ஆனால், கிருஸ்தவர்கள் மீது கடும் தாக்குதல் தொடுத்தார்.
கடந்த வாரமும் இதே போன்று மிகக் கடுமையாக சுதர்ஷன் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறுகையில்,இந்தியாவில் உள்ள சர்ச்சுகள் தங்களது வெளிநாட்டு மிஷனரி தொடர்புகளை அறுத்துக் கொள்ள வேண்டும். சுதேசிசர்ச்சுகளை உருவாக்க வேண்டும் என்று பேசி கிருஸ்தவர்கள் மத்தியில் பீதியைக் கிளப்பினார்.
மாநாட்டுக்குப் பின் நடந்த நிருபர்கள் கூட்டத்திலும் அவர் கிருஸ்தவர்களை விடவில்லை. கிருஸ்தவ அமைப்புகள்மதமாற்றம் மூலம் நாட்டை பிளவுபடுத்த நினைக்கின்றன. ராமரையும், கிருஷ்ணரையும தங்களது முன்னோராகமுஸ்லீம்களும், கிருஸ்தவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
ஆக்ரா மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல் பிரிவான பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய உள்துறை அமைச்சர்அத்வானி கலந்து கொண்டார். ஆனால், அவர் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணியவில்லை. திராவிடக் கட்சிகள், மம்தாவின்திருணமூல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் போன்ற மதசார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் தயவால் ஆட்சியில் இருப்பதால்அத்வானி மாநாட்டில் தன்னை அதிகம் அடையாளம் காட்டிக் கொள்ளவில்லை. அடக்கியே வாசித்தார்.
இந்த மாநாட்டின் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் (சி.எஸ்.ஐ.ஆர்.) இயக்குனர்மசோல்கரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. மாநிலத் தலைவர்கள், உத்தரப் பிரதேச அமைச்சர்கள் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். சீருடையில் வந்து கூட்டத்தில்கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications