கம்பு ஊன்றி நடக்கிறார் வாஜ்பாய் - நன்றாக நடக்க 3 மாதமாகும்
மும்பை:
கால் மூட்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் வாஜ்பாய் தற்போது கம்புஊன்றி மருத்துவமனை ஊழியர்கள் உதவியுடன் நடக்கிறார்.
அவர் முழுமையாக குணமடைய 3 மாதம் ஆகும் என்று மருத்துவமனை வட்டாரங்கள்தெரிவித்தன.
சமீபத்தில் நாக்பூரில் பாஜக செயற்குழுக் கூட்டம் நடந்தபோது திடீரென்று வாஜ்பாய்க்குமூட்டு வலி ஏற்பட்டது. உடனே டெல்லி திரும்பிய அவர் மருத்துவப் பரிசோதனைசெய்து கொண்டார்.
பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூட்டில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும்என்று கூறினர். இதையடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேன்டி மருத்துவமனையில்அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள இந்திய மருத்துவர் சித்தரஞ்சன் ரனாவத் அறுவை சிகிச்சைசெய்தார். அவர் சனிக்கிழமை மாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இந் நிலையில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருந்த வாஜ்பாய், இப்போதுகம்பு ஊன்றி நடக்கப் பழகி வருகிறார். அவருக்கு மருத்துவ ஊழியர்கள் உதவிசெய்கின்றனர்.
அவர் முழுமையாகக் குணமடைந்து நன்றாக நடப்பதற்கு குறைந்தது 3 மாதமாகும்என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது அவருக்கு பிசியோதெரபிபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த வாரம் ஜெய்பூரில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்து கொள்ள வரும்அறுவை சிகிச்சை நிபுணர் ரனாவத், மும்பை சென்று வாஜ்பாயியைப் பரிசோதிப்பார்என்று பிரீச் கேன்டி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வாஜ்பாயை பாஜக, தேசிய ஜனநாயகக்கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். மத்தியபெட்ரோலியத் துறை அமைச்சர் ராம் நாயக், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வாஜ்பாயைச்சந்தித்தார்.
சர்வதேச மார்க்கெட்டில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு குறித்துபிரதமரிடம் நாயக் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்துபாஜக தலைவர் பங்காரு லக்ஷ்மண், வாஜ்பாயைச் சந்தித்துப் பேசினார்.
குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், குடியரசுத் துணைத் தலைவர் கிருஷ்ண காந்த்ஆகியோர் தொலைபேசியில் வாஜ்பாயியைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாகமருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications