மேட்ச் பிக்ஸிங்: இந்தியாவிடமுள்ள முக்கிய ஒலிநாடாவைக் கேட்டு தெ.ஆப்பிரிக்கா மிரட்டல்
டர்பன்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோனியேமற்றும் இந்திய கிரிக்கெட் சூதாட்டக்காரர் இருவரும் பேசியதைப் பதிவு செய்துள்ளஒலிநாடாவைத் தரும்படி தென் ஆப்பிரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
குரோனியே மீதான மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு குறித்து நீதிபதி எட்வர்ட் கிங்தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது. இந்த கமிஷனின் தலைமைவழக்கறிஞராக இருப்பவர் ஷாமிலா பதோஹி.
கிங் கமிஷன் தனது விசாரணையை நவம்பர் மாதம் மீண்டும் தொடங்க உள்ளது.அதற்கு டெல்லி போலீஸாரிடமுள்ள அந்த ஒலிநாடாவில் பதிவாகியுள்ள பேச்சுவிவரம் தேவைப்படுகிறது.
அதை இந்திய அதிகாரிகள் தந்து உதவவேண்டும். இல்லையென்றால் சட்டப்படிநடவடிக்கை எடுக்கப்படும் என்று ஷாமிலா பதோஹி எச்சரித்துள்ளார்.
கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்மேற்கொண்டது. அப்போது இந்திய கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் சேர்ந்து மேட்ச்பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குரோனியே மீது குற்றம் சாட்டப்பட்டது.
இக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக எட்வர்ட் கிங் தலைமையில்விசாரணை கமிஷனை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நியமித்தது.
இக் கமிஷன் குரோனியே உள்பட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலும் சிலவீரர்களிடம் விசாரணை நடத்தியது. மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக மேலும்உண்மைகளை அறியும் பொருட்டு கமிஷனின் அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்துவிசாரணை நடத்தினர்.
கமிஷனின் தலைமை வழக்கறிஞரான ஷாமிலா பதோஹியும் மற்றொருவரும் இந்தியாவந்து விசாரணை நடத்தினர். இவர்களுடைய விசாரணை அறிக்கையின்அடிப்படையில்தான் கிங் கமிஷன் தனது விசாரணை மீண்டும் தொடங்குவதாகஇருந்தது.
ஆனால், கிங் கமிஷன் அதிகாரிகளின் இந்தியப் பயணம் தகவல் சேகரிப்பதில்அவ்வளவு உபயோகமாக இல்லை. இதையடுத்து தனது விசாரணையை நவம்பர்மாதத்துக்கு கிங் கமிஷன் ஒத்திவைத்துள்ளது.
இந் நிலையில், குரோனியேவும், கிரிக்கெட் சூதாட்டக்காரரும் பேசிய பேச்சு அடங்கியஒலிநாடாவைத் தரும்படி பதோஹி எச்சரித்துள்ளார். ஏற்கெனவே இரு நாட்டுஅதிகாரிகளும் ஒருவருக்கு ஒருவர் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில்முரண்டுபிடித்தனர்.
பின்னர் பிரச்சினை ஓரளவு சரி செய்யப்பட்டு பல முக்கிய தகவல்களை இருநாட்டினரும் பறிமாறிக் கொண்டனர். இன்னும் விசாரணை முடிவடையாத நிலையில்,இத்தகைய எச்சரிக்கையை கிங் கமிஷனின் மூத்த வழக்கறிஞர் வெளியிட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் ஹான்ஸி குரோனியோவுக்குஆயுட்காலம் முழுவதும் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்தது. ஆனால், கிரிக்கெட்வர்ணனையாளராக அவர் பணியாற்றுவதற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றுவாரியம் அறிவித்தது.
கிரிக்கெட் வாரியம் விதித்த ஆயுட்காலத் தடையை எதிர்த்து வழக்குத்தொடரப்போவதாக குரோனியே அறிவித்துள்ளார். குரோனியேவுக்கு ஆயுட்காலத்தடை விதிக்கப்பட்டதை பல வீரர்கள் எதிர்த்தும், ஆதரித்தும் கருத்து தெரிவித்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications