ராஜா மாதிரி இருக்கிறார் வீரப்பன்.. ராஜ்குமார் மருமகன்
பெங்களூர்:
சத்தியமங்கலம் காட்டில் வீரப்பன் டிவி, வீடியோ என சகல வசதிகளுடன் வாழ்ந்துவருகிறான் என வீரப்பனால் விடுவிக்கப்பட்ட ராஜ்குமாரின் மருமகன் கோவிந்தராஜுதெரிவித்துள்ளார்.
ராஜ்குமாருடன் கடத்தப்பட்ட அவருடைய மருமகன் கோவிந்தராஜு கடந்ததிங்கள்கிழமையன்று வீரப்பனால் விடுவிக்கப்பட்டார். அவர் கர்நாடக முதல்வர்கிருஷ்ணாவை சந்தித்து இரண்டு மணி நேரம் பேசினார். ஆனால் அதன் விவரங்கள்வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் கோவிந்தராஜ் கூறிய தகவல்களை முதல்வர் கிருஷ்ணா, சர்வ கட்சிகூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்கட்சி தலைவர்களிடம் தெரிவித்ததாககூறப்படுவதாவது:
வீரப்பன் டி.வி., வி..சி.டி. , உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும்வீரப்பன் வாழ்ந்து வருகிறான். ஜெனரேட்டர் உதவியுடன் வி.சி.டி. மூலம் சினிமாபார்த்து ரசிக்கிறான். அவனுக்கு வீடியோ கேசட்டுகள் சுலபமாக கிடைக்கின்றன.
"பாக்கெட் ரேடியோ மூலம் செய்திகள் கேட்டுத் தெரிந்து கொள்கிறான். ராஜ்குமார்கடத்தல் சம்பந்தமாக பல மொழி பேப்பர்களிலும் வந்த செய்சதிகளை சேகரித்துவைத்திருக்கிறான். செய்திகள் குறித்து கூட்டாளிகளுடன் விவாதிக்கிறான்.
வாரத்திற்கு இருமுறை காட்டிற்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து தேவையானஎல்லா பொருட்களும் காட்டிற்குள் கொண்டு வரப்படுகிறது. தனது தேவை,எச்சரிக்கைபற்றி தெரிவிக்க நிறைய ஆடியோ, வீடியோ கேசட்டுகளை வீரப்பன் வாங்கிவைத்திருக்கிறான். அவனிடம் உள்ள சிறிய வீடியோ கேமிரா மூலம் படம் பிடிக்கிறான்.
காட்டின் நடுப்பகுதியில் யாரும் நெருங்க முடியாத அடர்ந்த மரங்கள் உள்ள பகுதியில்நாங்கள் அனைவரும் வைக்கப்பட்டிருந்தோம். வாரம் முழுவதும் மாமிச உணவுதான்.
சமைப்பதற்கு தேவையான எல்லா வசதிகளும் அங்கு உள்ளன. காம்ப்ளான்,ஹார்லிக்ஸ், பூஸ்ட், பிஸ்கட் என எல்லா உணவுப் பொருட்களும் காட்டில் உள்ளது எனகோவிந்தராஜ் தெரிவித்ததாக தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications