கருணாநிதி ஏன் வாய்தா வாங்கியே காலம் கழித்தார்: கேட்கிறார் ஜெயலலிதா
சென்னை:
முதல்வர் கருணாநிதிக்கும், அவரது குடும்பத்துக்கும் ஆட்சி அதிகாரம் மட்டுமேகுறிக்கோள். அந்த குறிக்கோளைக் குழி தோண்டிப் புதைக்க என்னால் மட்டுமேமுடியும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளார்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கருணாநிதி இந்த தேர்தலில் நான் நிற்க தடை போட்டுத் தடுத்து நிறுத்தத் தேவை என்னஎன்று கேட்டு அங்கலாய்த்துள்ளார். தன் மோசடி எண்ணம் நாட்டு மக்களுக்குமுழுமையாகப் புரிந்து விட்டதால் பதற்றம் அடைந்துள்ளார்.
கருணாநிதிக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆட்சி அதிகாரம் மட்டுமே குறிக்கோள்.அந்தக் குறிக்கோளைக் குழி தோண்டிப் புதைக்க என்னால் மட்டும் தான் முடியும். அந்தவலிமை எனக்கு மட்டும்தான் உண்டு என்பது பொதுமக்களுக்கே தெரியும் பொழுது,கருணாநிதி குடும்பத்திற்குத் தெரியாதா என்ன?
கடந்த 1996-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இரவல் வெற்றி பெற்றகருணாநிதி, என்னைப் பழி வாங்க பொய்வழக்குகள் ஜோடிப்பதிலேயே ஐந்த ஆண்டுஆட்சிக் காலத்தை கடத்தினார்.
தனது குடும்பத் தொலைக்காட்சி மூலம் எனக்கெதிராக அவதூறு பிரசார இயக்கத்தைமிக வலிமையுடன் நடத்தினார் கருணாநிதி. அமைச்சர்கள் அளவிலான கூட்டத்திலும்,அதிகாரிகள் அளவிலான கூட்டத்திலும், தனிப்பட்ட வழக்கறிஞர்களிடமும்என்னைப்பழிவாங்குவதற்கு ஆலோசனை கேட்பதே கருணாநிதிக்குத் தூங்கும்பொழுதுகூட தொழிலாக நடந்தது.
தான் ஒரு பொது ஊழியரே அல்ல என்றும், ஊழல் தடுப்புச் சட்டம் தனக்குப்பொருந்தாது என்றும் நீதிமன்றங்களில் புலம்பியவர் கருணாநிதிதானே. கடந்த 1976-ம்ஆண்டு தனி நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கை நடத்த விடாமல் முடக்கி,நான்காண்டு காலம் வழக்கை வாய்தா வாங்கியே நீடித்தவர் இதே கருணாநிதிதான்.
கீழ் நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், என்று கோதுமைப்பேர ஊழல்வழக்கில் படுதோல்வி அடைந்தவர் கருணாநிதி. தன் மீது தொடரப்பட்ட கோதுமைபேர ஊழல் வழக்கை வாபஸ் வாங்க முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயிடம்கெஞ்சி முயன்றும் முடியாமல், கருணாநிதி புலம்பிய புலம்பல் உலகம் முழுவதும்கேட்டது.
பின்னர் வழக்கு தொடுத்த அன்றைய பிரதமர் இந்திராகாந்தியிடம் சரணடைந்து, காலில்விழுந்து கதறி, பெரும்பான்மை இடங்களைக் காங்கிரஸூக்கு விட்டுக்கொடுத்து,தி.மு.கவை அடகு வைத்து தன்னைக் காப்பாற்றிக் கொண்ட கருணாநிதியாவழக்குகளைப் பற்றியும், நீதியைப் பற்றியும் பேசுவது?
இனி எந்தத் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.கவை வெற்றி கொள்ள முடியாது என்றபயத்தில் தான் கருணாநிதிக்கு என்னைத் தேர்தலில் நிற்க விடாமல் தடுக்கும் தேவைஏற்பட்டுள்ளது.
கருணாநிதியே சொன்ன வார்த்தைகளின் படி, இது வாங்கப்பட்ட நீதியா?வழங்கப்பட்ட நீதியா? என்பதை கருணாநிதியின் இதயத்தைக் குடைந்து பார்த்தால்தெரியும்.
என்னைப் பழி வாங்கவே இத்துணை அக்கிரமங்களையும் கருணாநிதி செய்கிறார்என்று நாட்டு மக்களுக்குத் தெளிவாகத் தெரிந்த பிறகு, முழு பூசணிக்காயைச்சோற்றுக்குள் மறைக்கும் கருணாநிதிக்காக பரிதாபப்படுகிறேன் என்று ஜெயலலிதாகூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications