கிருஷ்ணா கூறித்தான் நெடுமாறன் போனார் .. கருணாநிதி
சென்னை:
கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கேட்டுக் கொண்டதன் பேரில் தான் தூதராக செல்ல நெடுமாறன் ஒப்புக்கொண்டார் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க காட்டுக்குச் சென்ற தூதர் குழுவில் இந்த முறை தமிழர் தேசிய இயக்கத் தலைவர்பழ.நெடுமாறனும் இடம் பெற்றிருந்தார். இவர் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர். இவரை தூதுக் குழுவில்இடம் பெறச் செய்ததற்கு தமிழகத்தில் த.மா.கா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே கண்டனம் தெரிவித்தன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரெய்ச்சூர் நிகழ்ச்சியில் பேசியபோது இதை கடுமையாக ஆட்சேபித்தார்.நெடுமாறனை அனுப்பியதற்கு தமிழக அரசு தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் சென்னையில் வியாழக் கிழமை சோனியாவின் புகார் பற்றி தமிழக முதல்வர் கருணாநிதியிடம்நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்:
மக்கள் உரிமைக் குழு கூட்டமைப்பு தலைவராக உள்ள நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, சுகுமாரன்ஆகியோரை தூதுக்குழுவில் அனுப்பி வைக்குமாறு வீரப்பனிடம் இருந்து தகவல் வந்தது. வீரப்பன் அனுப்பியகேஸட்டில் இந்த கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதுபற்றி கர்நாடக முதல்வரின் கருத்தை அறிய விரும்பினேன். உடனே நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜைபெங்களூருக்கு அனுப்பி கர்நாடக முதல்வரை சந்தித்து இதுபற்றி பேசும்படி கூறினேன். அதன்படி காமராஜிடம்கிருஷ்ணா சம்மதம் தெரிவித்தார். அதோடு மட்டுமல்ல, பெங்களூரில் இருந்து எஸ்.எம்.கிருஷ்ணா,நெடுமாறனுடன் தொலைபேசியில் பேசினார். அவரே நெடுமாறனை காட்டுக்குச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்.அதன் பிறகு தான் தூதுக் குழுவில் இடம் பெற்று நெடுமாறன் காட்டுக்கு சென்று வந்தார்.
நமக்கு இப்போது ராஜ்குமார் மீட்கப்படுவதுதான் முக்கியம் என்பதால் இதுபற்றி மேலும் விவாதிக்க நான்விரும்பவில்லை என்றார் முதல்வர் கருணாநிதி.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications