அ.பி. எல்லையில் சீன ஊடுருவல் கவலைக்குரியது.. பெர்னாண்டஸ்
டெல்லி:
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே உள்ள கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டைக்கடந்து சீன வீரர்கள் ஊடுருவியுள்ளதாக அருணாசலப் பிரதேச மாநில முதல்வர்தெரிவித்துள்ள கருத்தை சாதாரணமாக ஒதுக்கிவிடமுடியாது என்று மத்தியபாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் தெரிவித்தார்.
இந்திய-சீன எல்லைப் பகுதியில் உள்ள மாநிலம் அருணாசலப் பிரதேசம். இருநாடுகளுக்கும் இடையே கிழக்குப் பகுதியில் சுமார் 1030 கிலோமீட்டர் பொதுவானஎல்லைப் பகுதி உள்ளது. அது முழுவதும் அருணாசலப் பிரதேசத்தில்தான் உள்ளது.
இந் நிலையில், டிபாங் பள்ளத்தாக்கு மாநிலத்தில் உள்ள கெய்லா பகுதியில் சீனாவில்தயாரிக்கப்பட்ட பீரங்கியையும் தவாங், தாக்சிங் மற்றும் மஜா பகுதிகளில் சீனதுருப்புக்களின் நடமாட்டத்தையும் ராணுவத்தினரும், உளவுப் பிரிவினரும்கண்டுபிடித்துள்ளனர் என்று அருணாசலப் பிரதேச முதல்வர் முகுத் மித்தி அக்டோபர்15-ம் தேதி தெரிவித்தார்.
மித்தியின் இச் செய்தியை சாதாரணமாகக் கருதி ஒதுக்கி விட முடியாது. இருப்பினும்,இது குறித்து நான் இன்னும் மித்தியுடன் பேசவில்லை. மித்தியின் செய்தியில் உண்மைஇருக்கும்பட்சத்தில் அது பற்றி உடனடியாகக் கவனித்து நடவடிக்கை எடுக்கப்படும்என்று ஜார்ஜ் பெர்னான்டஸ் தெரிவித்தார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில்கலந்து கொள்ள வந்த நிருபர்களிடம் இதைத் தெரிவித்தார்.
ஒரு மாதத்துக்கு முன் நான் அருணாசலப் பிரதேசத்துக்குச் சென்றேன். அப்போது அம்மாநிலத்துக்குள் எந்த ஊடுருவலும் இல்லை. மித்தியின் செய்தியைப் பார்க்கும்போதுசமீப காலமாகத்தான் ஊடுருவல் இருப்பதாகத் தெரிகிறது என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications