தங்கம் வென்ற தங்கங்கள்
தேவை கொஞ்சம் நிதானம்!
நமது கிரிக்கெட் ஆட்ட விமர்சகர்களுக்கும், ரசிகர்களுக்கும் புதியதோர் உற்சாகம் பிறந்து விட்டது. கென்யாவில் நடக்கிற சர்வதேச ஒருநாள்பந்தயத்தில் ஆஸ்திரேலியாவையும், தென் ஆப்பிரிக்காவையும் தோற்கடித்து நமது அணி, இறுதி ஆட்டத்தில் இடம் பெறும் தகுதியைப் பெற்று விட்டதால்,நமக்கெல்லாம் தலை கால் புரியவில்லை.
யுவராஜ் சிங் என்ற புதிய இளைஞர் நன்றாக விளையாடி இரு மாட்சுகளிலும் சோபித்து, நமது உற்சாகத்தை வெறி என்ற அளவுக்கு வளர்த்துக்கொண்டிருக்கிறது.
மீண்டும் உலக சாம்பியன் ஆகி விட்டோம் என்ற தீர்மானத்திற்கே வந்துவிட்டோம். இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்றதால்நமக்கெல்லாம் கொஞ்சம் சுய நினைவு திரும்பியிருக்கிறது. அதில் மட்டும் மயிரிழையில் ஜெயித்திருந்தாலே போதும், நமக்கெல்லாம் பித்தம்தலைக்கேறியிருக்கும்.
என்னைப் பொறுத்தவரையில், இதில் எல்லாம் நிதானம் தேவை. யுவராஜ் சிங் நன்றாக ஆடினார் என்றாலும் - தொடர்ந்து அப்படி விளையாடுகிறாராஎன்று பார்க்க வேண்டும்.வெவ்வேறு வகையான பிட்சுகளில், அவருடைய ஆட்டம் எப்படி அமைகிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.சரக்கு இருக்கிறது என்பது புரிகிறது; அது எவ்வளவு தூரம் பயனுள்ள வகையில் செலுத்தப்படுகிறது என்பதை கவனிக்க அவகாசம் தேவை.
இது ஒருபுறமிருக்க, கென்யாவில் கங்குலி மிக அபாரமாக விளையாடினார்; டெண்டுல்கரும் தொடக்க வேகத்திற்கு உதவினார்; திராவிட் தன் பணியைஒழுங்காகவே செய்தார். (இறுதி ஆட்டத்தில், ஆமை வேகத்தை கடை பிடித்து கழுத்தறுத்தார் என்பது வேறு விஷயம்.)
இந்த மூவர் ஏமாற்றாத போது, நமது பாட்டிங்கின் அடித்தளம் நன்றாக அமைகிறது; நல்ல ஸ்கோர் வருகிறது. இது ஒன்றும் புதிததல்ல. நமது பொளலிங்வழக்கம் போலவே வீக்காகவேதான் இருக்கிறது. ஜாஹிர் என்கிற புதிய பெளலரைப்பற்றி, மிகவும் பாராட்டியே விமர்சனங்கள் வருகின்றன;ஆனால் எனக்கென்னவோ, நம்மிடம் உள்ள சுமார்களில் இன்னொருவராகவே ஜாஹிர் தெரிகிறார்.
நம்பிக்கை தருகிற ஓர் அம்சம் - நமது ஃபீல்டிங்கில் ஏற்பட்டுள்ள ஒரு முனைப்பு, நம்முடைய பலவீனமான, உப்புக்கு சப்பாணி பெளலிங்கை வைத்துக் கொண்டு,நாம் தொடர்ந்து வெற்றி காண வேண்டுமானால், ஃபீல்டிங் நெருப்பாக இருந்தால்தான் முடியும். அதில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது நல்லது,
வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மிகவும் பலவீனமடைந்து இருக்கின்றன; தென் ஆப்பிரிக்கா, ஹான்சி குரோனியே விவகார அதிர்ச்சியிலிருந்துமுழுமையாக மீளவில்லை; ஆஸ்திரேலியாவின் முனைப்பு மழுங்கத் தொடங்கியிருக்கிறது; ரணதுங்காவிற்குப் பிறகு இங்கை இப்போதுதான் கொஞ்சம்கொஞ்சமாக நிதானப்படுத்திக் கொண்டு வருகிறது; பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அரசியல் அதிகம் புகுந்திருக்கிறது.
இந்தச் சூழ்நிலைதான் நமக்கு அதிக சாதகமே தவிர, நமது திறமையில் திடீர் முன்னேற்றம் எதுவும் வியக்கத்தக்க வகையில் இன்னமும்நிகழ்ந்துவிடவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications