திட்டினால் தற்கொலை: இவை கவரி "மீன்கள்!"
கோவை:
நமக்கு யாராவது தொல்லை கொடுத்தால் திட்டுவோம், ரொம்ப கோவம் வந்தால்அறை விடுவோம். நாயிடம் போய் வாலாட்டினால், கடித்து சதையை எடுக்கும்.பாம்பிடம் போய் விளையாண்டால் விரட்டி விரட்டி பல்லைப் போடும்.
அதே போல மீனிடம் போய் தொல்லை தந்தால் தப்பி வேறு பக்கமாய் நீந்தி ஓடும்,நீரின் ஆழத்துக்குள் சென்றுவிடும்.
ஆனால், யாராவது தனக்குத் தொல்லை தந்தால் உயிரையே மாய்த்துக் கொள்ளும் மீன்வகை ஒன்று இருக்கிறது. ஒரு மயிர் நீத்தாலும் உயிர் நீக்கும் கவரிமான்களே வெட்கம்கொள்ளும் அளவுக்கு ரொம்ப ரோஷமான மீன் இது.
"அரோவ்னா என்ற இந்த அரிய வகை மீனிடம் போய் நீங்கள் சத்தம் போட்டாலேபோதும் உடனே சூசைட் அடம்ப்ட் தான். தொட்டியில் இருந்தால் அதன் சுவற்றில்போய் மோதி மோதியே தன்னை அழித்துக் கொள்கிறது இந்த மீன். பெரிய குளத்தில்இருந்தால் நீரை விட்டு வெளியே வந்து மூச்சுவிடாமல் இருந்தே உயிரை மாய்த்துக்கொள்ளும்.
இந்த சூப்பர் சென்சிடிவ் மீன்கள் குறித்து பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு மீன்பண்ணையில் பெரிய ஆராய்ச்சிய நடந்து வருகிறது.
தமிழ்நாடு மீன் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த ஆய்வுநடத்தப்பட்டு வருகிறது. வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட நான்கு மீன்கள் இந்தப்பண்ணைக்கு கொண்டு வரப்பட்டன.
இதில் ஒரு மீன் கடந்த அக்டோபர் மாதம் 7- ம் தேதி தற்கொலை செய்து கொண்டது.இந்த மீன் அடைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டின் சுவர்களில் மோதி தற்கொலைசெய்து கொண்டது.
இதனை சமாதானப் படுத்துவது கூட எளிதான காரியம் அல்ல!
கடந்த இரண்டு மாதங்களுக்கு பொள்ளாச்சியில் உள்ள மீன் வளர்ப்புப் பண்ணைக்குவந்த சில பார்வையாளர்கள் சத்தம் போட்டதால், கோபமடைந்த ஒரு மீன் இரண்டுமுறை தற்கொலை செய்து கொள்ள முயன்றது. ஆனால், அங்குள்ள மீன் பண்ணைஆய்வாளர்கள் உடனடியாக செயல்பட்டு வேறு இடத்திற்கு மாற்றி மீனைக்காப்பற்றினர்.
இந்த மீன் குறித்து தமிழ்நாடு மீன் வளர்ச்சி வாரிய மார்க்கெட்டிங் மேலாளர் திருமாறன்கூறுகையில், இந்த அரிய வகை மீனை உற்பத்தி செய்ய தேவையான முயற்சிகளைமேற்கொண்டு வருகிறோம்.
இந்த மீன், நீரின் மேற்பகுதியில் மட்டுமே வளரும். குளம், அணை அல்லதுவளர்க்கப்படும் தொட்டியின் மேல் பரப்பில் காணப்படும் பூச்சி, போன்ற உணவை,தண்ணீருக்குள்ளிருந்து துள்ளிக் குதித்து பிடித்துச் சாப்பிடும்.
சில்வர் மற்றும் பச்சைக் கலரை விட சிவப்பு கலராக உள்ள இந்த வகை மீனுக்குத் தான்அதிக "கிராக்கி உண்டு. எனவே இந்த வகை மீனை வளர்க்க முயற்சி செய்துவருகிறோம் என்றார்.
மனிதனுக்கு மட்டுமல்ல மனம் என்பது விலங்குகளுக்கும் உண்டு.
இது தவிர, ரத்தத்தை வாடை பிடித்து சாப்பிடும் மீன்களும் உண்டாம். இந்த வகைமீன்களுக்கு, ஏதாவது விலங்கு கிடைத்தால் போதும், ஒரு சில விநாடிகளில் அதன்ரத்தத்தை உறிஞ்சி எடுத்து விடும். இந்த வகை மீன்கள், கூட்டமாகத் தான் வாழுமாம்.அப்போது தான் பெரிய மிருகங்கள் கிடைக்கும்போது ஒரு துளி ரத்தம் கூட தண்ணீரில்கலக்காமல் உறிஞ்சிக் கொள்ளும்.
இந்த வகை மீனும் ஆழியாறு மீன் பண்ணையில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதேபோன்று பல வினோத மீன்கள் இங்கு பரிசோதனை அடிப்படையில் வளர்க்கப்பட்டுவருகின்றன.
இந்த வகை மீன்களில் குறிப்பிடத்தக்க மற்றொரு மீன் வகை "தும்பிக்கை வாய் மீன்.இந்த மீன் யானையின் தும்பிக்கை போன்ற வாய் அமைப்பைக் கொண்டிருப்பதால்தும்பிக்கை வாய் மீன் எனப் பெயரிட்டுள்ளனர். இந்த வகை மீன், மின்சாரஅதிர்வுகளை உண்டாக்கும் தன்மை உடையது. ஒரு நிமிடத்திற்கு 20 மின் அதிர்வுகள்இந்த மீனிலிருந்து வெளியாகும்.
வர்ண மீன் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இந்தியா பின் தங்கிய நிலையிலேயேஇருந்து வருகிறது என்கிறார் திருமாறன்.
மேலும் இவர் கூறுகையில், இந்தியாவில் வர்ண மீன்களை அதிகளவு உற்பத்தி செய்யக்கூடியவர்கள் அதிகம் பேர் இல்லை.
10 பேர் மட்டுமே பெரும் பண்ணை வைத்து உற்பத்தி செய்கின்றனர். இதில், 5 பேர்மட்டுமே ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் வர்ண மீன்களை 150 பேர்மட்டுமே முழு நேரத் தொழிலாக உற்பத்தி செய்கின்றனர். ஆனால் ஆயிரத்து 500 பேர்பகுதிநேர மீன் வளர்ப்போராக செயல்பட்டு வருகின்றனர் என்றார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications