இலங்கையில் தமிழ் நிருபர் கொலை: 20 புலிகள் சாவு
கொழும்பு:
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மயில்வாகனம் நிமலராஜன் (36)அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நிமலராஜன், உள்ளூர் மற்றும் வெளியூர் செய்தி நிறுவனங்களுக்காக பணியாற்றிவந்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து வியாழக்கிழமை காலை பத்துமணியளவில் நிமலராஜன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுடப்பட்டவுடன் அவரை யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.இருப்பினும் சிகிச்சை பலனளிக்காது அவர் இறந்தார்.
மயில்வாகனத்தைச் சுட்டவர்கள், தப்பியோடும் முன் அப்பகுதியில் ஒரு கிரனெட்குண்டை எறிந்து விட்டுத் தப்பினர்.
இந்த சம்பவத்தில், மயில்வாகனத்தின் மனைவி, மூன்று குழந்தைகள் காயமின்றித்தப்பினர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியவில்லை.
கொல்லப்பட்ட மயில்வாகனம், உள்ளூர் பத்திரிகைகள், பி.பி.சியின் தமிழ் மற்றும்சிங்கள சேவைகளில் பணியாற்றியிருக்கிறார். யாழ்ப்பாணம் மற்றும் இலங்கையின்வட பகுதியில் செயல்பட்டு வரும் விடுதலைப் புலிகள் மற்றும் பிற அமைப்பினர் இவர்மீது பெரும் அதிருப்தியுடன் இருந்து வந்தனர்.
சமீபத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட பல தமிழ் கட்சிகளின் வேட்பாளர்களைபகைப்படம் எடுத்து மயில்வாகனம் வெளியிட்டிருந்தார். இதற்கு தமிழ் கட்சிகள்எதிர்ப்பு தெரிவித்திருந்தன. தங்களை விடுதலைப் புலிகள் அடையாளம் கண்டுகொண்டு விடுவார்கள் என்று அவர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.
இதையும் மீறி மயில்வாகனம் புகைப்படம் எடுத்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருசெய்தித்தாளில் வெளியிட்டிருந்தார். இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புதெரிவித்திருந்தன.
நாகர்கோவிலில் கடும் சண்டை - 20 புலிகள் பலி:
இதற்கிடையே, வட இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும்தொடர்ந்து கடும் சண்டை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாகர்கோவில் என்ற நகர் அருகே கடும் சண்டை நடந்து வருகிறது. விடுதலைப்புலிகளின் முன்னேற்றத்தை இந்தப் பகுதியில் தடுத்து விட்டதாக ராணுவம் கூறியுள்ளது.இலங்கையின் வட பகுதியில் நாகர்கோவில் முக்கியமான பகுதியாகும். இந்த நகரின்ஒரு பகுதி விடுதலைப் புலிகள் வசம் உள்ளது. ஒரு பகுதி ராணுவக் கட்டுப்பாட்டில்உள்ளது.
கொழும்பில் தற்கொலைப் படைத் தாக்குதலை முடித்த கையோடு இந்தப் பகுதியில்கடும் தாக்குதலை விடுதலைப் புலிகள் துவக்கியுள்ளனர். கொழும்பு குண்டுவெடிப்பில்3 பேர் இறந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.
நாகர்கோவிலை முழுமையாக மீட்க ராணுவம் கடுமையாக போராடி வருவதாகராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறியுள்ளார்.
வியாழக்கிழமை நடந்த கடும் மோதலில் 20 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகஇலங்கை கடற்படை கூறியுள்ளது. விடுதலைப் புலிகளின் கடற் பிரிவான கடல் புலிகள்வந்த எட்டு படகுகளை இலங்கைக் கடற்படை வீரர்கள் சுற்றி வளைத்துத் தாக்கினர்.இதில் 20 புலிகள் கொல்லப்பட்டதாக கடற்படை மற்றும் ராணுவத் தரப்பில்தெரிவிக்கப்பட்டது.
நாகர்கோவில் நோக்கி இந்தப் படகுகள் வந்ததாகவும், மோதலில் மூன்று கொரில்லாபடகுகளும், 2 கடற்படை படகுகளும் சேதமடைந்தன என்றும் கருணாரத்னே தெரிவித்ததார்.
இதற்கிடையே விடுதலைப் புலிகளின் இன்டர்நெட் தளத்தில் வெளியிடப்பட்டஅறிக்கையில், 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களைக் கொன்றதாகதெரிவிக்கப்பட்டிருந்தது. மோதலில் 300 வீரர்கள் காயமடைந்ததாகவும் அதில்தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாகர்கோவில் பகுதி முழுவதும் கடும் சண்டை நடப்பதாலும், அப்பகுதியில்செய்தியாளர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாலும், உண்மையானநிலவரம் குறித்துத் தெரியவில்லை.
யு.என்.ஐ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications