கேரளாவில் தொழில் துவங்குகிறார் ஸ்வராஜ் பால்
திருவனந்தபுரம்:
கேரளத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காக இங்கிலாந்தைச்சேர்ந்த பிரபல இந்தியத் தொழிலதிபர் லார்டு ஸ்வராஜ் பால் டிசம்பர் மாதம் கேரளம்வருகிறார்.
இது குறித்து கேரள தொழில்துறை அமைச்சர் சுசீலா கோபாலன் கூறியதாவது:
கேரளத்தில் முதலீடு செய்ய ஸ்வராஜ் பால் அதிக ஆர்வமாக உள்ளார். மேலும்,கேரளத்தில் முதலீடு செய்யும்படி அவருக்கு கேரள மாநில தொழில் உள்கட்டமைப்புவளர்ச்சிக் கழகம் வேண்டுகோள் விடுத்தது.
இதையடுத்து கேரளத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காக வரும்டிசம்பர் மாதம் ஸ்வராஜ் பால் கேரளம் வருகிறார். இத் தகவலை அவரே தெரிவித்தார்.
தலைநகர் திருவனந்தபுரம் அல்லது கொச்சிக்கு ஸ்வராஜ் பால் வருவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. ஸ்வராஜ் பாலின் வருகை கேரள மாநிலத்துக்கு பெரும்நன்மையைத் தரும் என்று கருதுகிறோம்.
கேரளத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடு குறித்த சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைகேரள அரசு கூட்டியுள்ளது. இந் நிலையில், ஸ்வராஜ் பாலின் கேரள பயணம் அமைவதுகுறிப்பிடத்தக்கது.
கேரளத்தில் நேரடி வெளிநாட்டு முதலீட்டை அதிகரிக்கும் பொருட்டு கேரள தொழில்மறுவாழ்வு நிதி வாரியம் மூலம் ரூ. 150 கோடிக்கான பங்குகளை கேரள அரசு அடுத்தமாதம் வெளியிடுகிறது.
இதன் மூலம் கிடைக்கும் நிதி, பொதுத் துறை நிறுவனங்களின் நிதி ஆதாரத்தைச்சீரமைக்கப் பயன்படுத்தப்படும். இது தவிர நேரடி அன்னிய முதலீட்டை அதிகரிக்கும்பொருட்டு பல திட்டங்களை கேரள அரசு மேற்கொண்டுள்ளது என்றார் சுசீலாகோபாலன்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கடன் vs முதலீடு.. நிம்மதியாக தூங்க இதுதான் பார்முலா.. எதை செய்தால் நமக்கு லாபம்? -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications