வெள்ளை அறிக்கை கேட்கிறது த.மா.கா.
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டது நாடகமோ என்று உச்ச நீதிமன்றமே சந்தேகம்எழுப்பியுள்ளதால், வீரப்பன் விவகாரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கைவெளியிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து த.மா.கா. பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
வீரப்பனை முகமூடியாக வைத்து தீவிரவாத இயக்கங்கள் இன்னும் என்னென்னகோரிக்கைகளை வைப்பார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. விடுதலைப்புலிகள்ஆதரவாளரான நெடுமாறனை காட்டுக்குள் அனுப்பும் அவசியம் என்ன?
நெடுமாறன் தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்ள விரும்பாதவர். அவரையும்,அவரது ஆதரவாளர்களையும் அனுப்பியது ஏன் என்பதற்கு தமிழக அரசிடமிருந்துபதில் இல்லை.
நெடுமாறனை காட்டுக்குள் அனுப்ப அவரிடம் 2 பேர் எடுத்துச் சொன்னதாக தகவல்உள்ளது. அதில் ஒருவர் பெங்களூரைச் சேர்ந்த ரங்கநாத். இவர் ராஜீவ்கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து 8 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்.
நெடுமாறன் அரசு தூதர் இல்லை என்றும், கோபாலுடன் போனதால் அவரும் தூதர்தான் எனறும், வீரப்பன் கேட்டுக் கொண்டதால் நெடுமாறன் போனார் என்றும்முன்னுக்குபின் முரணாக கருணாநிதி பேசுகிறார்.
நெடுமாறனை அனுப்ப கர்நாடக முதல்வரிடம் ஒப்புதல் பெற நக்கீரன் இணைஆசிரியர் காமராஜை கருணாநிதி அனுப்பியுள்ளார். இரு மாநில அரசு எடுக்கும் இந்தமுயற்சிக்கு காமராஜை ஏன் அனுப்பினார்? முதல்வரின் இந்த செயல் பொறுப்பற்றது.
மதுரையில் நெடுமாறன் நடத்திய மாநாட்டில் பங்கேற்ற 100 பேர் இப்போதுகாட்டுக்குள் சென்று விட்டனர். வீரப்பனுடன் அவர்கள் வருங்கால செயல் திட்டம்பற்றி விவாதித்து வருகின்றனர். ஆனால், அதிரடிப்படையினர் காட்டுக்குள் செல்லக்கூடாது என்று வெளியில் நிறுத்தப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயல்களுக்குகருணாநிதி துணை போவது ஏன்?
கர்நாடக முதல்வர் பல முறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார். ஆனால்,கருணாநதி கண்டு கொள்ளவே மாட்டேன் என்கிறார். மக்கள் மத்தியில் உள்ளசந்தேகத்தை போக்கும் வகையில் தமிழக அரசு வீரப்பன் விவகாரம் தொடர்பாகவெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் தீவிரவாதிகளுக்கும், திமுகவுக்கும் நெருங்கியதொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகம் காரணமாகவே முந்தைய ஐக்கிய முன்னணிஅரசு பதவி இழக்க நேர்ந்தது. இதை கருணாநிதி மறந்து விட வேண்டாம் என்றார்எஸ்.ஆர்.பி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications