டிஸ்மிஸ் ஆனதால் வெறுப்பு: முன்னாள் ராணுவ வீரர் சுட்டு 5 பேர் பலி
குவஹாத்தி:
டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராணுவ வீரர், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர் இறந்தனர். 5பேர் படுகாயமடைந்தனர்.
அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தி ரயில்நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு இச் சம்பவம் நடந்தது.
அந்த ராணுவ வீரரின் பெயரை அதிகாரிகள் வெளியிடவில்லை. அஸ்ஸாம் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அந்தநபர் மீது நிறைய புகார்கள் வந்தன.
இதையடுத்து ராணுவ நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு ராணுவத்திலிருந்து அவர் நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட அந் நபர்ஹோவ்லி என்ற இடத்திலிருந்து கீழ் அஸ்ஸாம் பகுதியில் உள்ள டின்சுகியா என்ற இடத்துக்கு ரயிலில் அழைத்து வரப்பட்டார்.பாதுகாப்பு சில ராணுவ வீரர்கள் உடன் வந்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை குவஹாத்தி ரயில் நிலையத்தை அந்த ரயில் அடைந்தது. அப்போது திடீரென்று எழுந்த அந்த நபர்,பாதுகாப்புக்கு வந்த போலீஸாரிடமிருந்த ஏ.கே. 47 ரக துப்பாக்கி எடுத்து பிளாட்பாரத்தில் நின்றிந்தவர்களைப் பார்த்து சுட்டார்.
உடனே, தப்பியோடும்படி மக்களைப் பார்த்து ராணுவத்தினர் கூச்சலிட்டனர். இதற்கிடையே, ரயில் பெட்டியில் தன்னை மறைத்துக்கொண்டு தொடர்ந்து அந் நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருந்தார்.
அவரை நோக்கி மற்ற ராணுவத்தினரும் துப்பாக்கியால் சுட்டனர். இச் சண்டையில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 5 பேர்பலியானார்கள். 5 பேர் படுகாயமடைந்தனர்.
சண்டையின் முடிவில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அந்த ராணுவ வீரரும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். சுமார் 20 நிமிடத்தில்சினிமாவில் நடப்பது போன்று நடந்து முடிந்த இச் சம்பவத்தை அடுத்து குவஹாத்தி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications