அமைச்சர்கள் ராஜினாமா: கவிழ்கிறது கோவா அரசு?

Subscribe to Oneindia Tamil

பனாஜி:

அமைச்சர்கள் ராஜினாமா மற்றும் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஆகியவற்றால் கோவாஅரசு பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ளது.

ஆட்சி அமைத்து ஓராண்டு முடிவதற்குள் இரு பெரிய சிக்கல்களைச் சந்திக்க வேண்டியநிலைக்கு முதல்வர் பிரான்சிஸ்கோ சார்டினா தள்ளப்பட்டுள்ளார். மேலும், அங்குஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

40 பேர் கொண்ட கோவா சட்டப்பேரவையில் தற்போது கோவா மக்கள் காங்கிரஸ்,பாரதீய ஜனதாவும் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக கோவாமக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரான்சிஸ்கோ சார்டினா பதவி வகித்து வருகிறார்.

இந்த கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றிருந்த 3 பா.ஜ.க. அமைச்சர்களும் தங்களதுபதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்தனர்.

கல்வி அமைச்சர் பிரகாஷ் பாட்டே, சுகாதாரத் துறை அமைச்சர் சுரேஷ் அமோன்கர்,எரிசக்தித் துறை அமைச்சர் திகாம்பர் காமத் ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதத்தைகட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் மனோகர் பரிகாரிடம் சமர்ப்பித்துவிட்டதாகக்கூறியுள்ளனர்.

அடுத்து என்ன முடிவு என்பதை கட்சித் தலைவரே எடுப்பார் என்று தெரிவித்த மூன்றுபேரும் தங்களது ராஜினாமாவுக்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை. ஆனால், 3பேருடைய ராஜினாமா பற்றி மனோகர் பரிகார் இதுவரை எந்த கருத்தையும்தெரிவிக்கவில்லை.

கோவா சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், 3அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ளது அம் மாநில அரசுக்கு பெரிய சிக்கலைஏற்படுத்தியுள்ளது. மாநில முதல்வர் பிரான்சிஸ்கோ சர்டினா தற்போதுஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

மாநில நிலவரம் குறித்து அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே அவர்நாடு திரும்புவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவாவில் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி 3-வது முறையாக உடைந்துள்ளது. கடந்தஓராண்டுக்குள் கட்சி மூன்றாக உடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல்வர்உள்பட 4 பேர் அக் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

கோவா சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவி நாயக், முன்னாள் மத்தியஅமைச்சர் ரமாகாந்த் காலப், முன்னாள் அமைச்சர் சஞ்சய் பண்டேகர், மனோகர்அஸ்கோகர் ஆகியோர் தாங்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகசபாநாயகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியிலிருந்து 11 எம்.எல்.ஏ.க்கள் (சபாநாயகர்உள்பட) விலகினர். இவர்களில் 10 பேர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்துலூசினோ பெலைரோ விலகவேண்டும் என்று கோரினர்.

மேலும், பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்கவும் முடிவு செய்தனர். இது குறித்து கட்சித்தலைமைக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே நாங்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினோம் என்றுஅஸ்கோகர் தெரிவித்தார்.

கோவா அமைச்சரவையில் பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் முதலில் இரண்டாகஉடைந்தது. தற்போதைய முதல்வர் பிரான்சிஸ்கோ சர்டினா தலைமையில் 11 பேர்கட்சியிலிருந்து விலகி இந்திய தேசிய காங்கிரஸ் (சர்டினா) அல்லது கோவா மக்கள்காங்கிரஸ் என்ற புதிய கட்சியை உருவாக்கினர்.

பின்னர் பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை உருவாக்கினர். அதன் பிறகுஆகஸ்ட் 15-ம் தேதி காங்கிரஸ் கட்சி மீண்டும் உடைந்தது. முன்னாள் சபாநாயகர் ஷேக்ஹசன் ஹரூண் தலைமையில் 5 பேர் கட்சியிலிருந்து விலகி இந்திய தேசிய காங்கிரஸ்(எஸ்.ஹெச்.) என்ற கட்சியை ஏற்படுத்தினர். இவர்கள் சர்டினா கட்சிக்கு தங்களதுஆதரவைத் தெரிவித்தனர்.

2 மாதத்துக்குப் பிறகு இப்போது 3-வது முறையாக காங்கிரஸ் கட்சி உடைந்துள்ளது. 9பேர் கொண்ட அக் கட்சியிலிருந்து மேலும் 4 பேர் சனிக்கிழமை விலகினர். இப்போதுகோவா சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 5 ஆகக் குறைந்துவிட்டது.

கோவா சட்டப்பேரவையில் கட்சிகள் தற்போது பெற்றுள்ள இடங்கள் நிலவரம்(மொத்த இடங்கள் 40):

கோவா மக்கள் காங்கிரஸ் -11, பாஜக -10, இந்திய தேசிய காங்கிரஸ் (எஸ்.ஹெச்.) -5, காங்கிரஸ் -9 (சனிக்கிழமை உடைவதற்கு முன்பு), மகாராஷ்டிரவாதி கோமந்தக்கட்சி -2, தேசியவாத காங்கிரஸ் - 1, சுயேட்சை -1, சபாநாயகர் -1.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+